தமிழ்நாடு

tamil nadu

மகிந்த ராஜபக்ச வீட்டுக்கு தீ வைப்பு... எம்எல்ஏ வீடுகளும் தீக்கிரையாகின...இலங்கையில் பதற்றம்

By

Published : May 10, 2022, 7:59 AM IST

Updated : May 10, 2022, 9:54 AM IST

இலங்கை முழுவதும் உச்ச கட்ட கலவரம் வெடித்துள்ள நிலையில், குருனாகல்லில் உள்ள மகிந்த ராஜபக்சே வீட்டுக்கு தீ வைக்கப்பட்டது. இதனால் அங்கு பெரும் பதற்றம் நிலவி வருகிறது.

மகிந்த ராஜபக்ச வீட்டுக்கு தீ வைப்பு
மகிந்த ராஜபக்ச வீட்டுக்கு தீ வைப்பு... எம்எல்ஏ வீடுகளும் தீக்கிரையாகின...

கொழும்பு:சுதந்திரத்திற்குப் பின்னர் நாட்டில் ஏற்பட்டுள்ள மோசமான பொருளாதார நெருக்கடி அரசியல் நிலையற்ற தன்மைக்கு வழிவகுத்துள்ள நிலையில், இலங்கையில் ஒரு மாதத்திற்கும் மேலாக போராட்டங்களை சந்தித்து வருகிறது. முதன்முறையாக, நடுத்தர வர்க்கத்தினரும் பெருமளவில் வீதிகளில் இறங்கி பெறும் போராட்த்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவர்களில் சிலர் ஜனாதிபதி அலுவலகத்திற்கு வெளியே வாரக்கணக்கில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பிரதமர் ராஜினாமா செய்ய வேண்டும் என போராட்டங்கள் தீவிரம் அடைந்ததால் (மே 9) மகிந்த ராஜபக்ச பிரதமர் பதவியிலிருந்து விலகினார். இது அந்நாட்டில் மேலும் குழப்பம் அதிகரித்துள்ளது.

இதையடுத்து தலைநகரில் ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக மகிந்த ராஜபக்ச ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையில், நிட்டம்புவ பிரதேசத்தில் ஆளுங்கட்சி எம்பி அமரகீர்த்தி அதுகோரல்லா துப்பாக்கியால் சுடப்பட்டு கொல்லப்பட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

மகிந்த ராஜபக்ச வீட்டுக்கு தீ வைப்பு... எம்எல்ஏ வீடுகளும் தீக்கிரையாகின

மேலும் குருனாகல்லில் உள்ள மகிந்த ராஜபக்சவின் வீட்டுக்கு போராட்டகாரர்களால் தீ வைக்கப்பட்டது. அதுமட்டுமின்றி ராஜபக்சே ஆதரவாளர்களின் வீடுகள், எம்எல்ஏ வீடுகளும் தீக்கிரையாக்கப்பட்டு வருகின்றன. இதனால் இலங்கையில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

இதையும் படிங்க:இலங்கையில் உச்சகட்ட குழப்பம்; ஆளுங்கட்சி எம்பி கொலை.. ரயில் போக்குவரத்துக்கு தடை!

Last Updated : May 10, 2022, 9:54 AM IST

ABOUT THE AUTHOR

...view details