ஹைதராபாத்:சந்திரயான்-3 விண்கலத்திலிருந்து விக்ரம் லேண்டர் பிரிந்து நிலவை நெருங்கி வருகிறது. இந்நிலையில், சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் எடுத்த புதிய புகைப்படங்களைஇஸ்ரோ(ISRO) வெளியிட்டுள்ளது.
நிலவை ஆய்வு செய்ய இஸ்ரோ சந்திரயான் - 3 விண்கலத்தை நிலவுக்கு அனுப்பியுள்ளது. இந்திய விண்வெளி ஆய்வின் தந்தையான விக்ரம் சாராபாய் நினைவாக இந்த சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டருக்கு 'விக்ரம்' என்று பெயரிடப்பட்டது. இந்த சந்திரயான்-3 விண்கலத்தின் நிலவை நோக்கிய சுற்றுப்பாதையை வரும் 23-ஆம் தேதியன்று இறுதியாகக் குறைக்கும் நிகழ்வைத் தொடர்ந்து, நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கப்படும். இதிலிருந்து ஒருவாரத்தில் நிலவில் விக்ரம் லேண்டார் தரையிறங்கி தனது பணியைத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து கடந்த ஜூலை 14-ல் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் சந்திரயான் -3 விண்கலத்தை விண்ணில் ஏவிய நிலையில், ஒரு மாதத்தை கடந்து இலக்கை நோக்கி சந்திரயான் விண்கலம் அதன் பணியைச் செய்து வருகிறது.
நிலவை ஆய்வு செய்யும் பணியில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய மூன்று நாடுகளுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடு என்ற மிகப்பெரிய பெருமையை 'இந்தியா' பெற உள்ளது. இதற்காக நமது நாடு ரூ.615 கோடி ரூபாய் செலவு செய்துள்ளது. 2019-ல் நிலவை நோக்கிய சந்திரயான் விண்கலத்தின் பயணம் தோல்வியடைந்தது.
பின்னர் இந்த சந்திரயான்-3 விண்கலம் திட்டத்திற்கான பணிகள் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு 2020 ஆண்டே துவங்கப்பட்டு, 2021-ல் ஏவுவதற்குத் திட்டமிடப்பட்டது. இருப்பினும், கரோனா தொற்று காரணமாக இப்பணிகளில் ஏற்பட்ட சிறு தொய்வை அடுத்து, தற்போது இந்த முறை இஸ்ரோ வெற்றியை நோக்கி உள்ளது. இந்த நிலையில் தான் கடந்த 15-ஆம் தேதி விக்ரம் லேண்டர் எடுத்த புகைப்படங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.
முன்னதாக, நிலவை ஆராய்வதற்கான இந்தியாவின் சந்திரயான்-3 விண்கலம் திட்டமிட்டபடியே செயல்படுவதாகவும், நிலவின் சுற்று வட்டப்பாதையில் அதன் பயணம் சரியாக இருப்பதாகவும், இந்த விண்கலம் வரும் ஆக.23-ல் நிலவின் இறங்கும் என்றும் இஸ்ரோவின் தலைவர் எஸ்.சோமநாத் நம்பிக்கையுடன் தெரிவித்து இருந்தார்.
மனிதர்கள் வாழும் இப்பூமியின் கடந்த காலத்தின் களஞ்சியமாகத் திகழப்போகும் நிலவை நோக்கிய இப்பயணம் பூமியைப் போல, சூரியக் குடும்பத்தைத் தாண்டி உள்ளவற்றையும் ஆராய பெரும் உதவியாக அமையும். குறிப்பாக, இந்த பயணம் பூமியிலிருந்து நிலவை நோக்கிய சாதகமான நிலப்பரப்பு மற்றும் இயக்க நிலைமைகள் காரணமாகவும் கொண்ட பூமத்திய ரேகைப் பகுதியை முதன்மை இலக்காகக் கொண்டுள்ளது. இருப்பினும், இந்த நிலவின் தென் துருவப்பகுதி, பூமத்திய ரேகையுடன் ஒப்பிடுகையில் மிகவும் மாறுபட்டதோடு, சவால் தரும் நிலப்பரப்பாகவும் உள்ளது கவனிக்கப்பட வேண்டியது.
இதையும் படிங்க: "சந்திரயான் 3 விண்கலத்தில் இருந்து விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக பிரிந்தது" - இஸ்ரோ அறிக்கை!