தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பள்ளத்தில் சிக்கிய ரோவர்.. பாதையை மாற்றிய பிரக்யானின் ஆய்வு.. இஸ்ரோ வெளியிட்ட தகவல்! - திருவனந்தபுரம்

Pragyan Rover: திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த இஸ்ரோ தலைவர் சோம்நாத், நிலவில் பிரக்யான் ரோவரின் வேலைபாடுகள் குறித்த தகவல்களை தெரிவித்தார்.

பாதையை மாற்றிய பிரக்யானின் ஆய்வு
பாதையை மாற்றிய பிரக்யானின் ஆய்வு

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 28, 2023, 9:22 PM IST

பெங்களூரு:நிலவின் ஆய்வில் இருக்கும் பிரக்யான் ரோவர், நிலவிலுள்ள பள்ளங்களால் தன் பாதையில் இருந்து மாறி புதிய பாதையில் நிலவில் ஆய்வு மேற்கொள்ள தயாராகி உள்ளதாக இஸ்ரோ தனது x பக்கத்தில் பதிவிட்டுள்ளது. இது குறித்து இஸ்ரோவின் தலைவர் சோம்நாத் கடந்த சனிக்கிழமை தனது சொந்த ஊரான திருவனந்தபுரத்தில், சந்திரயான்3 யின் வெற்றிக்காக நடைபெற்ற சிறப்பு வழிபாட்டிற்குப் பின்னர், திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது, பிரக்யான் ரோவரின் வேலைபாடுகள் குறித்த தகவல்களை தெரிவித்தார்.

நிலவின் முக்கிய கூறுகளை பகுப்பாய்வு செய்யும் நோக்கில், பல்வேறு ஆண்டுகாலமாக, பல்வேறு நாடுகள் முனைப்பு காட்டி வந்த நிலையில், சந்திரயான் 3 திட்டத்தின் மூலம் இந்தியா அதனை வெற்றிகரமாக நிகழ்த்தி காட்டியுள்ளது. நிலவில் அடியெடுத்து வைக்கும் 4- வது நாடு என்ற பெருமையையும், இதுவரையில் யாருமே கணக்கிட்டு பார்க்காத நிலவின் தென் துருவ பகுதியில் கால் வைக்கும் முதல் நாடு என்ற பெருமையையும் பெற்றுள்ளது இந்தியா.

கடந்த மாதம் ஜூலை 14 ஆம் தேதி இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது சந்திரயான் 3. 10 சுற்றுகளாக நிலைநிறுத்தப்பட்டு, பின்னர் ஆகஸ்ட் 23 ஆம் தேதி நிலவில் வெற்றிகரமாக தரை இறங்கி சாதனை படைத்தது. நிலவில் இறங்கிய சந்திரயான்-3ன் விக்ரம் லேண்டரின் இறக்கத்தின் போது ஏற்பட்ட புழுதி அடங்கும் வரையில் காத்திருந்து, புழுதிகாற்று அடங்கியப் பின்னர், தனது உள்ளே இருந்த பிரக்யான் ரோவர் வெளிவந்து நிலவில் அடி வைத்தது. விகரம் லேண்டரின் ஆயுள் காலம் பூமியின் 14 நாட்களாக கணக்கிடப்பட்டிருக்கும் நிலையில், பிரக்யான் அதன் வேலையை சிறப்பாக செய்ய தயாராகியுள்ளது.

நிலவை சுற்றி வரும் பிரக்யான் ரோவர், நிலவின் கனிமத்தன்மை, நிலவின் பள்ளங்களின் நிறைந்திருக்கும் அடர்த்தி மற்றும் வெப்ப நிலைகள் குறித்து ஆய்வினை மேற்கொண்டுள்ளது. இதுவரையில் நிலவில் தனது ஆய்வினை சிறப்பாக மேற்கொண்டு வரும் ரோவர், சேகரிக்கப்பட்ட தரவுகளை அவ்வப்போது லேண்டருக்கு அனுப்பப்பட்டு உறுதி படுத்துகிறது. சமீபத்தில் நிலவின் வெப்பநிலை குறித்த பிரக்யானின் தகவல் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. இதன்மூலம் சூரிய ஒளி படாத நிலவின் தென் துருவ பகுதியில் நீர், பனிக்கட்டிகளாக படிந்திருக்க வாய்ப்பு அதிகமாக உள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் யூகிக்கின்றனர்.

தற்போது நிலவின் ஆய்வில் இருக்கும் ரோவர், நிலவில் கொண்டுள்ள பள்ளங்களால் தனது பாதையில் இருந்து புதிய பாதைக்கு மாறியுள்ளது. 4மீட்டர் டையாமீட்டர் கொண்ட பள்ளத்தை 3 மீட்டர் தொலைவிற்கு முன்னரே கணித்த பிரக்யான் ரோவர் தன்னிலையில் இருந்து மாறி, அதன் ஒரு பகுதி ஆய்விற்கு பிறகு, புதிய பாதையில் ஆய்வு மேற்கொள்ள தயாராகியுள்ளதாக இஸ்ரோ தனது x பக்கத்தில் தகவல் வெளியிட்டுள்ளது. இது குறித்து கடந்த சனிக்கிழமை இரவு திருவனந்தபுரத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரோ தலைவர் சோம்நாத், "நாட்டின் அறிவியல் வளர்ச்சி மற்றும் இந்தியா விண்வெளி ஆய்வு நிறுவனம் குறித்து ஒரு தொலை நோக்கு பார்வை கொண்டுள்ளார் பிரதமர் மோடி.

நிலவில் சந்திரயான் 3யின் தரையிறக்கத்தைக் கடந்து பின்வரும் செயல்களில் அதன் முழு திறனும் வெளிப்பட்டாலே சந்திரயான்3-யின் 100% வெற்றியாக இஸ்ரோ கருதும். அதற்காக ஒட்டுமொத்த நாடே எதிர்நோக்கி காத்திருக்கின்றது. மேலும், இஸ்ரோ விஞ்ஞானிகள் நிலவைத் தொடர்ந்து, செவ்வாய் மற்றும் வெள்ளி கிரகங்கள் குறித்த பயணங்களில் அதிகளவில் ஈடுபட்டு வருகிறோம். இந்த முயற்சிக்கு விஞ்ஞானிகளின் உழைப்பு மட்டுமின்றி முதலீடுகளும் தேவைப்படுகின்றன. குறுகிய வட்டத்தில் இருந்த இந்திய விண்வெளி மையம் தற்போது அறிவியல் சாத்தியங்களில் உலக அளவில் அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது" என தெரிவித்தார்.

இதையும் படிங்க:செப்.2இல் விண்ணில் பாய்கிறது ஆதித்யா எல்1 - இஸ்ரோ அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

ABOUT THE AUTHOR

...view details