தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சாதனை படைத்த சந்திரயான்..! ஆச்சரியத்தில் ஆழ்த்திய ஆதித்யா..! இஸ்ரோவிற்கு இனிக்கும் ஆண்டான 2023..! - ஆண்டு கண்ணோட்டம்

Annual overview 2023: சந்திரயான் 3 நிலவில் வெற்றிகரமாகத் தரை இறக்கம், சூரியனை ஆய்வு செய்யச் சென்ற ஆதித்யா எல் 1 விண்கலத்தின் வெற்றி என 2023ஆம் ஆண்டை இஸ்ரோ தனக்கான ஆண்டாக மாற்றி உலக நாடுகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

Chandrayaan 3 and Aditya L1 success make 2023 memorable year for ISRO
இஸ்ரோவிற்கு மறக்க முடியாத ஆண்டாக அமைந்த 2023

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 20, 2023, 7:22 PM IST

ஹைதராபாத்: இந்தியாவின் விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ 2019ஆம் ஆண்டு சந்திரயான் 2 திட்டத்தில் தோல்வியைச் சந்தித்து, நான்கு வருடங்களுக்குப் பின்னர் மீண்டும் சந்திரயான் 3 விண்கலத்தை நிலவில் வெற்றிகரமாகத் தரையிறக்கி மிகப் பெரிய சாதனையைப் படைத்தது.

நிலவை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட சந்திரயான் 3 விண்கலம், சூரியனை ஆய்வு செய்யச் சென்ற ஆதித்யா எல் 1 விண்கலம் என இந்தாண்டு அடுத்தடுத்த சாதனைகளைப் படைத்து தனக்கு மறக்க முடியாத ஆண்டாக இஸ்ரோ மாற்றியமைத்துள்ளது. இந்நிலையில் இஸ்ரோ தனது அடுத்தடுத்த சாதனைகளுக்குத் தயாராகி வருகின்றது.

சந்திரயான் 3 வெற்றியின் மூலம் நிலவின் தென் துருவத்தில் விண்கலத்தைத் தரையிறங்கிய நாடுகளான அமெரிக்கா, ரஷ்யா , சீனா ஆகிய நாடுகளின் பட்டியலில் இந்தியா இணைந்த நிலையில், நிலவின் தென் துருவத்தில் சாஃப்ட் லேண்டிங் செய்த முதல் நாடாக இந்தியா முத்திரை பதிக்கச் செய்தது இஸ்ரோ. இதனால் உலக நாடுகள் முழுவதும் இஸ்ரோவின் சாதனையைப் பாராட்டியது.

நிலவுக்கு மனிதனை அனுப்பும் இலக்கு:நிலவின் தென் துருவத்தில் சாஃப்ட் லேண்டிங் செய்த முதல் நாடாக இந்தியாவை மாற்றியதோடு, அடுத்ததாக 2035ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் முதல் விண்வெளி நிலையத்தை நிறுவ உள்ளதாகவும் இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். அதுமட்டுமல்லாமல் நிலவிற்கு மனிதனை அனுப்பும் திட்டம் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும், இது நடந்துவிட்டால் உலக நாடுகள் மத்தியில் இஸ்ரோ ஒரு கேம் சேஞ்சராக மாறும் எனவும் கூறப்படுகிறது.

அடுத்தடுத்த நடவடிக்கைகளில் மும்முரம்:இந்தாண்டு ஆகஸ்ட் மாதம் சந்திரயான் 3 விண்கலத்தை நிலவில் தரையிறக்கிய பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கு இன்னும் சில ஆண்டுகள் ஆகும் என மற்ற நாடுகள் நினைத்திருந்த நிலையில், செப்டம்பர் மாதமே சூரியனை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா எல் 1 என்ற விண்கலத்தை விண்ணில் செலுத்தியது இஸ்ரோ.

பூமியிலிருந்து 15 லட்சம் கி.மீ., பயணித்து சூரியனுக்கு மிக அருகில் உள்ள லாக்ராஞ்சியன் புள்ளி எல் 1ல் ஆதித்யா விண்கலம் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. சூரியனின் மேற்பரப்புகளை ஆய்வு செய்வதற்காகச் சென்ற ஆதித்யா எல் 1 விண்கலம் சூரியனின் படங்களைப் பிடித்து அதனின் செயல்பாடுகளை ஆராய்ந்து அறிவியல் சோதனைகளுக்காக இஸ்ரோவிற்கு அனுப்பி வருகிறது.

நிறைவேறும் ஆதித்யா எல் 1ன் நோக்கம்:ஆதித்யா எல் 1, பூமிக்கும் சூரியனுக்கும் இடையே சமநிலையான ஈர்ப்பு இடமான எல் 1 சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. இந்த புள்ளியில் விண்கலம் இருப்பதால் சூரியனின் செயல்பாடுகளை எந்த தடையின்றி கவனிக்கவும், சூரிய கதிர்வீச்சுகளை அணுக உதவுவதாகவும் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். ஆதித்யா எல்1 திட்டத்தின் நோக்கம் விரைவில் வெற்றி பெரும் எனவும், ஆதித்யா திட்டம் இறுதிக் கட்டத்தை நெருங்குகிறது என இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.

மீண்டும் நிலவில் இந்தியா:இஸ்ரோ தற்போது சந்திரயான் 4 திட்டத்தைத் தயார் செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. ககன்யான் என்ற திட்டத்தின் படி பூமியிலிருந்து மூன்று மனிதர்களை சுமார் 400 கிலோமீட்டர் உயரத்திற்கு விண்வெளிக்குக் கூட்டிச் சென்று, மீண்டும் அவர்களைப் பத்திரமாகப் பூமிக்குக் கொண்டு வருவது தான் இந்த திட்டத்தின் நோக்கமாக இருக்கிறது. இந்த திட்டத்திற்கான முதற்கட்ட சோதனை வெற்றிகரமாக நிறைவடைந்த நிலையில் 2ஆம் கட்ட சோதனை 2024ஆம் ஆண்டின் முதல்பாதியில் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க:அதிகரித்து வரும் புதியவகை கரோனா தொற்று.. உலக சுகாதார அமைப்பு எச்சரிப்பது என்ன?

ABOUT THE AUTHOR

...view details