2015ஆம் ஆண்டுக்கான குடிமைப் பணி தேர்வை எழுதிவிட்டு, ஒரு மழைநாளில் தேர்வு முடிவுக்காக காத்திருந்தார் சாந்தினி சந்திரன். தேர்வு முடிவை நினைத்து பதற்றப்படாமல் இருக்க, தனது நண்பர் அருண் சுதர்ஷன் என்பவரோடு அந்த மழையில் வெளியே சென்றிருக்கிறார்.
தேர்வில் வெற்றி பெற்றவர்கள் புகைப்படங்கள் செய்தித்தாளில் வெளியாகியிருக்கின்றன. அதில் தனியார் செய்தித்தாள் ஒன்று இவர்கள் இருவரும் சேர்ந்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது.
அந்த தனியார் நிறுவனத்துக்கு அழைத்து புகார் செய்த அருண் சுதர்ஷன், பின்னாளில் சாந்தினியின் காதல் கணவராகிப் போனார். இதுகுறித்து சாந்தினி, அப்போது எங்கள் திருமணம் நடக்கவில்லை. குடிமைப் பணி தேர்வில் வெற்றி பெற்றவர்கள் பட்டியலில் என் புகைப்படமும் இடம்பெறும் என எதிர்பார்த்திருந்தேன். ஆனால், நான் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் எனக்கு உறுதுணையாக இருக்கும் காதலை சென்றடைந்தேன்.