தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இந்தியா 75 - வரலாற்றுப் பக்கங்களில் சாந்தினி சௌக் - சாந்தினி சௌக் வரலாறு

1857 புரட்சிக்குப் பிறகு ஏற்பட்ட மாற்றங்களைக் கண்ட டெல்லியின் சாந்தினி சௌக், அடிமைத்தனத்திலிருந்து சுதந்திரத்தின் பொன் விடியல் வரை அனைத்தையும் கண்டது. ஒரு காலத்தில் அழகிய மரங்கள் நிறைந்த காடாக அறியப்பட்ட சாந்தினி சௌக் இப்போது டெல்லியின் வணிக மையமாக உள்ளது.

சாந்தினி சௌக்
சாந்தினி சௌக்

By

Published : Dec 19, 2021, 2:04 PM IST

Updated : Dec 20, 2021, 8:53 PM IST

முகலாயப் பேரரசு ஷாஜகானின் கனவான தலைநகரை மாற்றம் செய்வது 1649ஆம் ஆண்டில் நிறைவேறியது. சரியாக ஒரு வருடம் கழித்து, அதாவது 1650இல், சாந்தினி சௌக் உருவாக்கப்பட்டது.

செங்கோட்டையில் இருந்து ஃபதேபுரி மசூதிக்கு செல்லும் சாலையை இன்று மக்கள் சாந்தினி சௌக் என அழைக்கின்றனர். ஒரு காலத்தில் யமுனை நதியில் இருந்து வெளியேறும் கால்வாய் அங்கு பாய்ந்தது.

அதன்பிறகு, 1911-ல் ஆங்கிலேயர்கள் டெல்லியைத் தலைநகராகக் கொண்டபோது, அதே கால்வாய் தளத்தில் டிராம்கள் ஓடத் தொடங்கின. நாடு பிரிந்த பின், டில்லிக்கு வந்த அகதிகள், இங்கு கடைகளை நடத்த துவங்கினர். இதன் காரணமாக அதன் பொருளாதார முக்கியத்துவம் அதிகரித்து குடியிருப்புகள் குறைந்தன.

1857-க்கு பின்னான புரட்சி

சாந்தினி சௌக் செங்கோட்டையிலிருந்து தொடங்கி, ஜெயின் கோவில், கவுரி சங்கர் கோவில், குருத்வாரா ஷீஷ்கஞ்ச் வழியாக ஃபதேபுரி மஸ்ஜித் வரையிலான பகுதியை உள்ளடக்கியது. சாந்தினி சௌக்கை சுற்றியுள்ள பலிமாறன் கலி, காரி பாவ்லி, கினாரி பஜார், மோதி பஜார், பரந்தே வாலி கலி போன்ற பகுதிகள் உணவு ஆர்வலர்களின் சொர்கபுரியாக உள்ளது.

சாந்தினி சௌக்கின் சிறப்பே அதனை சுற்றியிருக்கும் பல வகையான கடைகள் தான். பலதரப்பட்ட கலாச்சார சிறப்புகள் அதற்கான தனித்துவத்தை கொடுக்கிறது. பிரபல உருது கவிஞர் மிர்சா காலிப் சாந்தினி சௌக்கை ஒட்டிய பலிமாறன் பகுதியில் வசித்து வந்தார். எந்தவொரு நகரமாக இருந்தாலும் நாள்கள் செல்ல செல்ல மாற்றங்கள் நிகழும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

1857 புரட்சிக்குப் பிறகு ஏற்பட்ட மாற்றங்களைக் கண்ட டெல்லியின் சாந்தினி சௌக், அடிமைத்தனத்திலிருந்து சுதந்திரத்தின் பொன் விடியல் வரை அனைத்தையும் கண்டது.

வரலாற்றுப் பக்கங்களில் சாந்தினி சௌக்

ஒரு காலத்தில் அழகிய மரங்கள் நிறைந்த காடாக அறியப்பட்ட சாந்தினி சௌக் இப்போது டெல்லியின் வணிக மையமாக உள்ளது. சாந்தினி சௌக்தான் நமது அசல் கலாச்சாரம் மற்றும் மரபுகளின் வேர்களைக் கொண்டது. இவற்றைப் புரிந்து கொள்ள ஒருவர் சாந்தினி சௌக்கின் பாதைகளில் நடந்து செல்ல வேண்டும்.

இதையும் படிங்க: இந்தியா 75 - சுதந்திரப் போராட்டத்தில் வாஞ்சிநாதனின் பங்கு

Last Updated : Dec 20, 2021, 8:53 PM IST

ABOUT THE AUTHOR

...view details