தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மாணவிகளின் குளியல் வீடியோ வெளியான வழக்கு - சிறப்பு புலனாய்வுக்குழு அமைப்பு! - சண்டிகர் பல்கலைக் கழக சம்பவம்

சண்டிகர் பல்கலைக்கழக மாணவிகளின் குளியல் வீடியோ வெளியான சம்பவம் தொடர்பாக விசாரிக்க மகளிர் சிறப்பு புலனாய்வுக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக பஞ்சாப் காவல்துறை டிஜிபி தெரிவித்துள்ளார்.

Video
Video

By

Published : Sep 19, 2022, 5:06 PM IST

பஞ்சாப்: பஞ்சாப் மாநிலத்தில் சண்டிகர் பல்கலைக்கழக மாணவிகளின் குளியல் வீடியோ வெளியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக, பஞ்சாப் காவல்துறை டிஜிபி கௌரவ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், "பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் உத்தரவின் பேரில், சண்டிகர் பல்கலைக்கழக வழக்கை விசாரிக்க, மூத்த ஐபிஎஸ் அதிகாரி குர்பிரீத் கவுர் தியோவின் மேற்பார்வையில், மூன்று பேர் கொண்ட மகளிர் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது. ஒரு மாணவி உள்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

ஹிமாச்சல பிரதேச டிஜிபி சிறப்பான ஒத்துழைப்பு அளித்தார், அவருக்கு நன்றி. செல்போன் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தின் பின்னணியை சிறப்பு புலனாய்வு குழு ஆய்வு செய்யும். இதில் சம்மந்தப்பட்ட யாரும் தப்பிக்க முடியாது. அதேநேரம் அனைவரும் அமைதியை கடைபிடிக்க வேண்டும். வதந்திகளை நம்பி யாரும் வன்முறையில் ஈடுபட வேண்டாம். ஒன்றிணைந்து செயல்படுவோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: குளியல் வீடியோ வெளியான சம்பவம் - மாணவிகளை வீடியோ எடுத்த சக மாணவி கைது!

ABOUT THE AUTHOR

...view details