உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள சமோலி மாவட்டத்தில் உள்ள தபோவன்-ரேனி பகுதியில் பிப்.7ஆம் தேதி காலை பனிப்பாறைகள் திடீரென உடைந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அங்கு ரிஷிகங்கா மின்திட்டத்திற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில், அப்பகுதியில் வசித்தவர்களின் வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.
உத்தரகாண்ட் வெள்ளப்பெருக்கு: பலி எண்ணிக்கை 61ஆக உயர்வு! - உத்தரகண்ட் வெள்ளப்பெருக்கு
உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 61ஆக உயர்ந்துள்ளது.
வெள்ளப்பெருக்கு
வெள்ளப்பெருக்கின்போது, 200க்கும் மேற்பட்டோர் மாயமானதாகக் கூறப்படுகிறது. இதுவரை வெள்ள பாதிப்பில் உயிரிழந்த 61 பேரின் சடலங்கள், 28 பேரின் உடல் பாகங்கள் ஆகியவை மீட்கப்பட்டுள்ளதாக அம்மாநில காவல் துறை தெரிவித்துள்ளது. அதில் 25 பேரின் அடையாளம் இன்னும் கண்டறியப்படவில்லை எனக் கூறப்பட்டுள்ளது.
காணாமல் போனவர்களை கண்டுபிடிக்க மீட்பு பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. ரெய்னி கிராமத்தில் வெள்ளப்பெருக்கு எச்சரிக்கை இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது.