உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள சமொலி மாவட்டத்தில் உள்ள தபோவன் சுரங்கப் பாதையில், கடந்த பிப்.7ஆம் தேதி காலை பனிப்பாறைகள் உடைந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அங்கு ரிஷிகங்கா மின்திட்டத்திற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்ததால், அப்பகுதியில் வசித்தவர்களின் வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. இதில், சுமார் 200க்கும் மேற்பட்டோர் சிக்கிக்கொண்டதாகக் கூறப்பட்டது.
தபோவன் சுரங்கப் பாதையில் தேட தேட கிடைக்கும் சடலங்கள்! - டெஹ்ராடூன்
டேராடூன்: வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மூன்று மாதங்கள் முடிந்துள்ள நிலையிலும், தபோவன் சுரங்கப் பாதையில் மாயமானவர்களைத் தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
டெஹ்ராடூன்
இந்நிலையில், நேற்று(மே.9) மேலும் ஒரு சடலத்தை சுரங்கப்பாதையிலிருந்து தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் (NDRF) கண்டுபிடித்தனர். தற்போது வரை 82 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். சம்பவ நடந்த இடத்திலிருந்து 35 பேரின் உடல் உறுப்புகள் மட்டும் கிடைத்துள்ளன. இருப்பினும், மாயமான 121 பேரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சடலமாகக் கண்டுபிடிக்கப்பட்ட 82 பேரில், 49 பேரை அடையாளம் காணப்பட்டுள்ளனர்.