தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ரிக்‌ஷாவில் சென்ற மூதாட்டியிடம் செயின் பறிப்பு - சிசிடிவி வைரல் - Chain flush to grandmother

புதுச்சேரியில் ரிக்‌ஷாவில் சென்ற மூதாட்டியிடம், அடையாளம் தெரியாத நபர் ஒருவர் செயினை பறித்து செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி வைரலாகி வருகிறது.

செயின் பறிப்பு

By

Published : Aug 2, 2021, 4:36 PM IST

Updated : Aug 2, 2021, 5:10 PM IST

புதுச்சேரி: புதுச்சேரி ஆசிரமத்தைச் சேர்ந்த வட மாநிலத்தவர் கே.பி கவுல் (70). இவர் நேற்று (ஆக.1) மாலை செட்டி தெருவில் உள்ள ஒரு உணவகத்தில், உணவு வாங்கிக் கொண்டு, ரிக்‌ஷாவில் தனது இல்லத்திற்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர், மூதாட்டியின் கழுத்தில் அணிந்திருந்த 2 சவரன் செயினை பறித்து சென்றார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

மூதாட்டியிடம் செயின் பறிப்பது தொடர்பான சிசிடிவி காட்சி

மூதாட்டி வழக்கமாக அந்த வழியாகவே உணவு வாங்க செல்வதால், செயின் பறிப்பு சம்பவம் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டதா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தபட்டு வருகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:மணல் திருட்டு - மூவர் கைது

Last Updated : Aug 2, 2021, 5:10 PM IST

ABOUT THE AUTHOR

...view details