டெல்லி:பெண்களுக்கு ஏற்படும் கருப்பை வாய் புற்றுநோய்க்கான தடுப்பூசியை இந்தியா வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து வருகிறது. இந்த நிலையில், கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசியை இந்தியாவிலேயே உருவாக்க, சீரம் இந்தியா நிறுவனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதையடுத்து மத்திய உயிரி தொழில்நுட்ப துறையும், சீரம் இந்தியா நிறுவனமும் இணைந்து இந்த தடுப்பூசியை கண்டுபிடித்தது. தடுப்பூசிக்கான மருத்துவப் பரிசோதனைகள் அனைத்தும் நிறைவடைந்துள்ளது.
இந்த நிலையில், கருப்பை வாய் புற்றுநோய்க்கான தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு நிகழ்ச்சி டெல்லியில் இன்று (செப்.1) நடைபெற்றது. இதில், மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், உயிரி தொழில்நுட்பவியல் துறை செயலாளர் ராஜேஷ் கோகலே, சீரம் இந்தியா நிறுவன தலைமைச் செயல் அதிகாரி அதார் பூனவல்லா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.