ஜெய்ப்பூர்: 'பதஞ்சலி டயரீஸ்’ தலைமை செயல் அலுவலர் சுனில் பன்சால் கரோனா தொற்றால் உயிரிழந்தார். அலோபதி மருத்துவம் குறித்து பதஞ்சலி நிறுவனர் பாபா ராம்தேவ் கூறிய சர்ச்சை கருத்துக்களுக்கு மத்தியில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
'பதஞ்சலி டயரீஸ்' சிஇஓ கரோனாவால் மரணம்!
பால் சார்ந்த பொருள்களை உற்பத்தி செய்யும் 'பதஞ்சலி டயரீஸ்'இன் தலைமை செயல் அலுவலர் சுனில் பன்சால் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.
பதஞ்சலி சுனில் பன்சால் மரணம்
கரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்த பன்சாலின் வயது 57. நுரையீரலில் அதீத தொற்று, மூளையில் ரத்தக் கசிவு ஆகிவற்றால் அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
பால் சார்ந்த தொழிலில் தேர்ந்த வல்லுநரான பன்சால், 2018ஆம் ஆண்டு முதல் பதஞ்சலி நிறுவனத்தின் வெற்றிப் பாதையில் முக்கிய நபராக தடம் பதித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.