டெல்லி: மத்திய குடும்ப மற்றும் சுகாதாரத்துறை அமைச்சகத்தில் செயலர் ராஜேஷ் பூஷண் மலைக் கிராமங்கள் அதிகமுள்ள மாநிலங்களின் சுகாதாரத்துறை அலுவலர்களிடம் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.
மலைக்கிராமங்களில் தொற்று பரவலை தடுக்க தகுந்த நடவடிக்கைகளை எடுங்கள்: சுகாதாரத்துறை செயலர் - local Covid restrictions
மலைக்கிராமங்களில் தொற்று பரவலைத் தடுக்க தகுந்த நடவடிக்கைகளை அந்தந்த மாநில அரசுகள் எடுக்க வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷண் தெரிவித்துள்ளார்.
மத்திய சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷண்
அப்போது, மலை கிராமங்களில் கோவிட்-19 பரவலைத் தடுக்க அந்தந்த மாநில அரசுகள் வழிமுறைகளை வகுத்து, தொற்றைக் கட்டுப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். தொடர்ந்து மலை கிராமங்கள் அதிகமுள்ள மாநிலங்களில் தொற்று பரவல் அதிகரித்து வருவதை காண முடிகிறது என்று கூறினார்.
மலைக்கிராம மக்கள் மருத்துவமனைகளை எளிதில் அணுக விழிப்புணர்வை ஏற்பட்ட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.