தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

50% தடுப்பூசி இலவசம் - மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் உறுதி - இந்தியாவில் கோவிட்-19 தடுப்பூசி

இந்தியாவில் தயாரிக்கப்படும் 50 விழுக்காடு தடுப்பூசிகளை மத்திய அரசு இலவசமாகத் தரும் என ஹர்ஷ் வர்த்தன் தெரிவித்துள்ளார்.

Harsh Vardhan
Harsh Vardhan

By

Published : Apr 26, 2021, 1:19 PM IST

இந்தியாவில் 18 வயதினருக்கு மேற்பட்டவர்களுக்கான தடுப்பூசி செலுத்தும் பணி வரும் மே 1ஆம் தேதிமுதல் தொடங்கவுள்ளது. இந்நிலையில், இந்தியாவில் பயன்படுத்தப்பட்டுவரும் கோவிட்-19 தடுப்பூசிகளான கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகியவற்றைத் தயாரிக்கும் நிறுவனங்கள் விலையை நிர்ணயித்துள்ளன.

இந்த விலை நிர்ணயத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட பல தரப்பிலிருந்து விமர்சனம் எழுந்துவரும் நிலையில் அதற்கான விளக்கத்தை மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் அளித்துள்ளார்.

இது குறித்து அவர், "தற்போதையை தடுப்பூசி கொள்கையின்படி 50 விழுக்காடு தடுப்பூசிகளை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் வைத்து அதை இலவசமாகவே தரவுள்ளது. மீதமுள்ள 50 விழுக்காடு தேவையைக் கருதி மாநில அரசுகளுக்கு வழங்கப்படுகிறது.

மாநில அரசுகள் தேவைக்கேற்ப முன்னுரிமை அளித்து செலுத்திக்கொள்ளலாம். பாதி தடுப்பூசிகளை மத்திய அரசு இலவசமாக தரும் நிலையில் இது தொடர்பான தேவையற்ற குழப்பங்கள் உருவாக்கப்படுகிறது" எனக் கூறியுள்ளார்.

இதையும் படிங்க:பிபிஇ உடையுடன் வந்த மணப்பெண் - கோவிட் வார்ட்டில் தாலி கட்டிய மாப்பிள்ளை!

ABOUT THE AUTHOR

...view details