தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இன்று மழைக்கால கூட்டத்தொடர்- 31 மசோதாக்கள் நிறைவேற்ற திட்டம்! - மழைக்கால கூட்டத்தொடரில்

நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கும் நிலையில், 31 மசோதாக்களை நிறைவேற்ற ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது.

Monsoon Session
Monsoon Session

By

Published : Jul 19, 2021, 8:42 AM IST

டெல்லி: 17ஆவது மக்களவையின் 6ஆவது மழைக்கால கூட்டத்தொடர் திங்கள்கிழமை (ஜூலை 19) தொடங்குகிறது. இந்த கூட்டத்தொடரில், 31 மசோதாக்களை நிறைவேற்ற ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. அதில் இரண்டு நிதி மசோதாக்கள் ஆகும்.

முன்னதாக பத்திரிகை மற்றும் ஊடகங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்றை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அளித்தார். அதில், “17ஆவது மக்களவை மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 19ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 13ஆம் தேதி முடிவடையும்” எனத் தெரிவித்திருந்தார்.

இந்த மழைக்கால கூட்டத்தொடரில் நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ள மசோதாக்கள் விவரம் வருமாறு:-

  1. பகுத்தறிவு, சேவை நிபந்தனை தீர்ப்பாயம் மசோதா, 2021.
  2. திவால் நிலை, திவால் குறியீடு (திருத்தம்) மசோதா, 2021.
  3. தேசிய தலைநகர் பிராந்தியத்திலும், அதனை ஒட்டிய பகுதிகளிலும் காற்று தர மேலாண்மை ஆணையம் மசோதா 2021.
  4. அத்தியாவசிய பாதுகாப்பு சேவை மசோதா 2021.
  5. இந்திய மருத்துவ மத்திய கவுன்சில் திருத்த மசோதா 2021.
  6. ஹோமியோபதி மத்திய கவுன்சில் திருத்த மசோதா 2021.
  7. மரபணு (டி.என்.ஏ) தொழில்நுட்ப பயன்பாடு மற்றும் செயல்பாடு ஒழுங்குமுறை மசோதா 2019.
  8. காரணி ஒழுங்குமுறை திருத்த மசோதா 2020.
  9. உதவி இனப்பெருக்க தொழில்நுட்பம் ஒழுங்குமுறை மசோதா 2020.
  10. பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்களின் பராமரிப்பு மற்றும் நலன் (திருத்தம்) மசோதா 2019.
  11. மாநில உணவு சபை நிறைவேற்றிய தேசிய உணவு தொழில்நுட்ப தொழில்முனைவோர் மற்றும் மேலாண்மை மசோதா 2019.
  12. மக்களவையில் நிறைவேற்றிய 2021 ஆம் ஆண்டு கப்பல் உதவி மசோதா.
  13. சிறார் நீதி (குழந்தைகளின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) திருத்த மசோதா 2021.
  14. வாடகை தாய் (ஒழுங்குமுறை) மசோதா 2019.
  15. நிலக்கரி எடுக்கும் பகுதிகள் (கையகப்படுத்தல் மற்றும் மேம்பாடு) திருத்த மசோதா, 2021.
  16. பட்டய கணக்காளர்கள், செலவு மற்றும் பணி கணக்காளர்கள் மற்றும் நிறுவன செயலாளர்கள் திருத்த மசோதா 2021.
  17. வரையறுக்கப்பட்ட பொறுப்பு கூட்டுத் திருத்த மசோதா 2021.
  18. கன்டோன்மென்ட் மசோதா (பாதுகாக்கப்பட்ட பகுதி)2021.
  19. இந்திய அண்டார்டிகா மசோதா 2021.
  20. மத்திய பல்கலைக்கழகங்கள் திருத்த மசோதா, 2021.
  21. இந்திய வன மேலாண்மை நிறுவனம் 2021.
  22. ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் திருத்த மசோதா 2021.
  23. வைப்பு காப்பீடு மற்றும் கடன் உத்தரவாதக் கழகம் திருத்த மசோதா 2021.
  24. இந்திய கடல் மீன்வள மசோதா 2021.
  25. பெட்ரோலியம் மற்றும் தாதுக்கள் (குழாய்வழி) திருத்த மசோதா, 2021.
  26. உள்நாட்டு கப்பல்கள் மசோதா 2021.
  27. மின்சாரம் திருத்த மசோதா, 2021.
  28. நபர்கள் கடத்தல் தடுப்பு, பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வு மசோதா 2021.
  29. தேங்காய் மேம்பாட்டு வாரியம் திருத்த மசோதா, 2021.

II- நிதி மசோதாக்கள்

மழைக்கால கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படவுள்ள நிதி மசோதாக்கள்.

  1. 2021-22 ஆம் ஆண்டிற்கான மானியங்களுக்கான துணை கோரிக்கைகள் குறித்த விளக்கக்காட்சி, கலந்துரையாடல் மற்றும் வாக்களிப்பு மற்றும் தொடர்புடைய ஒதுக்கீட்டு மசோதாவை அறிமுகப்படுத்துதல், பரிசீலித்தல் மற்றும் நிறைவேற்றுதல்.
  2. 2017-18 ஆம் ஆண்டிற்கான மானியங்களுக்கான கூடுதல் கோரிக்கைகள் குறித்த விளக்கக்காட்சி, கலந்துரையாடல் மற்றும் வாக்களிப்பு மற்றும் தொடர்புடைய ஒதுக்கீட்டு மசோதாவை அறிமுகப்படுத்துதல், பரிசீலித்தல் மற்றும் நிறைவேற்றுதல்.

இந்த மழைக்கால கூட்டத்தொடரில் 19 அமர்வுகள் வரை நடைபெறவுள்ளது. முன்னதாக கோவிட் பரவல் காரணமாக கடந்த குளிர்கால கூட்டத் தொடர் அமர்வு நடைபெறவில்லை.

ஆகஸ்ட் 13 நிறைவு

அஸ்ஸாம், மேற்கு வங்கம், தமிழ்நாடு, கேரளம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட மாநிலத் தேர்தலுக்கு பிறகு நடைபெறும் முதல்கட்ட கூட்டத்தொடர் இதுவாகும். இந்த அமர்வில் தாக்கல் செய்யப்படும் 31 மசோதாக்களில் 6 ஏற்கனவே உள்ள ஆணைக்கு மாற்றாக தாக்கல் செய்யப்படவுள்ளது.

அமர்வானது காலை 11 மணிக்கு தொடங்கி, மாலை 6 மணிக்கு நிறைவு பெறுகிறது. இதில் நிதி மசோதாவுக்கு 4 நாள்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. உறுப்பினர்களுக்கு ஒரு மணி நேரம் உணவு இடைவேளை ஆகும். இந்த கூட்டத்தொடர் ஆகஸ்ட் 13ஆம் தேதி நிறைவு பெறுகிறது.

இதையும் படிங்க : அனைத்துக்கட்சித் தலைவர்கள் கூட்டம்... வைகோவிடம் பிரதமர் மோடி நலம் விசாரிப்பு

ABOUT THE AUTHOR

...view details