நாடு முழுவதும் கோவிட்-19 தடுப்பூசி செலுத்தும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இதையடுத்து கோவிஷீல்டு, கோவாக்சின் நிறுவனங்கள் தடுப்பூசிக்கான விலையை நிர்ணயித்துள்ளன. இதற்குப் பல்வேறு மாநில அரசுகள் எதிர்ப்புத் தெரிவித்துவருகின்றன.
இது தொடர்பாக சத்தீஸ்கர் மாநில முதலமைச்சர் பூபேஷ் பாகல் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தனுக்கு கடிதம் ஒன்றை எழுதினார்.
அதில், "சீரம் நிறுவனம் இதுவரை ஒரு டோஸ் தடுப்பூசியை ரூ.150-க்கு வழங்கிவந்த நிலையில், அதை தற்போது மாநில அரசுகளுக்கு ரூ.400ஆக உயர்த்தியுள்ளது.