தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மீண்டும் தலைதூக்கும் கரோனா: 6 மாநிலங்களுக்கு விரையும் மத்திய குழு - கோவிட்-19 மத்திய குழு ஆய்வு

கோவிட்-19 தொற்று அதிகரிக்கத் தொடங்கியுள்ள ஆறு மாநிலங்களில் மத்திய குழு ஆய்வு மேற்கொள்ளவுள்ளது.

Central government
Central government

By

Published : Jul 2, 2021, 9:51 PM IST

இந்தியாவில் கோவிட்-19 இரண்டாம் அலை மே மாதம் உச்சம் தொட்ட நிலையில், கடந்த 15 நாள்களில் தொற்றின் தீவிரம் கணிசமாகக் குறைந்துள்ளது. இதையடுத்து, பல மாநிலங்களும் தளர்வுகளை அறிவித்துள்ளன.

மீண்டும் தலைதூக்கும் கரோனா

இந்நிலையில், ஆறு மாநிலங்களில் மீண்டும் கரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளதை ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சகம் கண்டறிந்துள்ளது. கேரளா, அருணாசலப் பிரதேசம், திரிபுரா, ஒடிசா, சத்தீஸ்கர், மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் தொற்றுப் பரவல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதால், அங்கு மத்திய ஆய்வுக் குழுவை அமைச்சகம் அனுப்பியுள்ளது.

மாநிலங்களுக்குச் செல்லும் மத்திய குழு, கள நிலவரங்களையும் ஆராய்ந்து மாநிலங்களுக்குத் தேவையான வழிகாட்டு நெறிகளைப் பரிந்துரை செய்யவுள்ளது. குறிப்பாக, படுக்கை, ஆக்ஸிஜன் வசதிகள், தடுப்பூசித் திட்டங்கள் குறித்து இந்தக் குழு ஆய்வுசெய்யவுள்ளது.

இதையும் படிங்க:கரோனா நிலவரம்: இந்தியாவில் 4 லட்சத்தைத் தாண்டிய உயிரிழப்பு

ABOUT THE AUTHOR

...view details