தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மத்திய அரசின் இசைக்கு ஏற்ப நடனமாடும் வருமான வரித்துறையினர் - ராகுல் காந்தி சரமாரி - வருமான வரித்துறை சோதனை

டெல்லி: விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்த பாலிவுட் நட்சத்திரங்களின் வீட்டில் ஐடிதுறையினர் சோதனை நடத்திய நிலையில், மத்திய அரசின் இசைக்கு ஏற்ப வருமான வரித்துறையினர் நடனமாடுவதாக ராகுல் காந்தி குற்றச்சாட்டு சுமத்தியுள்ளார்.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

By

Published : Mar 4, 2021, 7:36 PM IST

இயக்குநர் அனுராக் காஷ்யப், நடிகை டாப்ஸி ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர். ஒட்டுமொத்த பாலிவுட் துறையும் விவசாயிகள் விவகாரத்தில் மத்திய அரசுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த நிலையில், இவர்கள் இருவர் மட்டும் விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர்.

இந்நிலையில், விவசாயிகளுக்கு ஆதரவாக கருத்து தெரிவிப்பவர்களின் வீட்டில் சோதனை நடத்தப்படுவதை கண்டித்துள்ள ராகுல் காந்தி, மத்திய அரசின் இசைக்கு ஏற்ப வருமான வரித்துறையினர் நடனமாடுவதாக குற்றம்சாட்டியுள்ளார்.

பிரபலமான இந்தி பழமொழிகளின் மூலம் விமர்சனம் செய்துள்ள ராகுல் காந்தி, மத்திய அரசின் மிரட்டுல்களுக்கு முன்பு நட்பு ஊடகம் அஞ்சு நடுங்குவதாகவும் தெரிவித்துள்ளார். அதேபோல், விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் கொடுப்போரின் வீட்டில் மத்திய அரசு ரெய்டு நடத்துவதாகவும் ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.

ராகுல் காந்தி ட்வீட்

மும்பையிலுள்ள பாண்டம் பிலிம் ஜோகேஸ்வரி அலுவலகம், இயக்குநர் அனுராக் காஷ்யப் வசிக்கும் ஓஷிவாரா பகுதியிலுள்ள வீடு, நடிகை டாப்ஸி பன்னு வசிக்கும் கோரேகான் பகுதியில் உள்ள வீடு ஆகியவைகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details