தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ரேஷன் கடைகளில் 5 கிலோ சிலிண்டர்! - small LPG cylinders at ration shops

ரேஷன் கடைகளில் 5 கிலோ சமையல் எரிவாயு உருளை வழங்கும் திட்டம் விரைவில் அமலுக்கு வரவுள்ளது.

cylinders
cylinders

By

Published : Jan 23, 2022, 2:50 PM IST

டெல்லி : 2 ஆண்டுகளுக்கு முன்பே ரேஷன் கடைகளில் சமையல் எரிவாயு உருளை விநியோகம் குறித்து மத்திய அரசு சிந்தித்துவந்தது.

இந்தத் திட்டத்துக்கு தற்போது ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ஆக இனிவரும் காலங்களில் ரேஷன் கடைகளில் அரிசி, பருப்பு, கோதுமை, சர்க்கரை, சமையல் எண்ணெய் உள்ளிட்ட பல்வேறு உணவுப் பொருள்களுடன் மானிய விலையில் சமையல் எரிவாயு உருளையும் கிடைக்கும்.

இந்த சமையல் எரிவாயு உருளை 5 கிலோ எடையில் இருக்கும் என்று கூறப்படுகிறது. நாட்டு மக்கள் அனைவருக்கும் சுகாதாரமான சமையல் எரிவாயு இணைப்பை வழங்க வேண்டும் என்பது மத்திய பாஜக அரசின் இலக்காகும்.

இதற்காகவே இலவச சமையல் சிலிண்டர் திட்டம் உள்ளிட்ட திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இதுமட்டுமல்லாமல் சமையல் சிலிண்டர்களுக்கு மானிய உதவியும் வழங்கப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : Gas Cylinder Theft: போறபோக்கப் பார்த்தா அடுத்து தக்காளி தான் போல... சமையல் சிலிண்டர் அபேஸ்

ABOUT THE AUTHOR

...view details