2022ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதி முதல் ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருள்கள் தடை செய்யப்படும் என ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகம் அறிவித்துள்ளது.
ஜூலை 1 முதல் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு தடை - single-use plastic items
16:52 August 13
ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருள்களின் உற்பத்தி, இறக்குமதி, விற்பனை, பயன்பாடு ஆகிய அனைத்திற்கும் தடை விதிக்கப்படும் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் 40 விழுக்காடு பிளாஸ்டிக் கழிவுகள் சுற்றுச்சூழல் மாசை ஏற்படுத்தி சுகாதாரச் சீர்கேட்டை தருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அரசின் இந்த அறிவிப்பு திடக் கழிவு மேலாண்மையை மேம்படுத்தி, சுற்றுச்சூழல் சீர்கேட்டைக் குறைக்கும்.
இதையும் படிங்க:”இனி இயல்பு வாழ்க்கை என்பதே பேரிடர்களுக்கு நடுவில்தான்” - ஐபிசிசி ஷாக் ரிப்போர்ட்