டெல்லி:மத்திய அரசின் மூன்று புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த சில வாரங்களாக, டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், மத்திய அரசு வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என ஆம் ஆத்மி கட்சியின் செய்தி தொடர்பாளர் ராகவ் சத்தா வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக பேசிய அவர், "மத்திய அரசு தனது அகங்காரத்தை விடுத்து, விவசாயிகளின் கோரிக்கைக்கு ஒப்புதல் தெரிவிக்க வேண்டும். இந்த பிரச்னைக்கு தீர்வு கிடைப்பது போல் தெரியவில்லை. எனவே மூன்று கருப்பு சட்டங்களையும் உடனடியாக ரத்து செய்ய வேண்டும். மோடி அரசு விவசாயிகளுடன் ஈகோ பிரச்னையில் ஈடுபட்டுள்ளது. விவசாயிகளின் கோரிக்கை நியாயமானது" என்றார்.