ஹைதராபாத் நகரில் வரும் டிசம்பர் 1ஆம் தேதி மாநகராட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது. இதையடுத்து அங்கு தேர்தல் பரப்புரை சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக ஆளும் தெலங்கானா ராஷ்டிரிய சமிதிக்கு கடும் போட்டிக் கொடுக்க வேண்டும் என்ற நோக்கில் பாஜக தீவிரமாக கள செயல்பாட்டில் ஈடுபட்டுவருகிறது.
குறிப்பாக சிறுபான்மை மக்களை குறிவைத்து அரசியல் செய்யும் நோக்கில் பாஜக தலைவர்கள் ஹைதராபாத்தில் சட்டவிரோத குடியேற்றம் நடைபெறுவதாக குற்றஞ்சாட்டிவருகின்றனர்.
இந்நிலையில், இது தொடர்பாக மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டி தனது கருத்தை தெரிவித்துள்ளார். அதன்படி, ரோஹிங்கியா மக்கள் பலர் பழைய ஹைதராபாத் நகரில் வசிப்பதாக தகவல்கள் கிடைத்துவருவதால் அதை மத்திய அரசு கண்காணித்துவருகிறது. அவர்கள் சட்டத்திற்குப் புறம்பாக ரேஷன் அட்டை, அடையாள அட்டைகளை பெற்றுள்ளார்களா எனவும் பரிசோதித்துவருகிறோம். இதை அரசு கவனமாக கையாண்டுவருகிறது என்றார்.
இதையும் படிங்க: கங்கனாவின் கட்டடத்தை இடித்தது சூழ்ச்சியான செயல் - உயர் நீதிமன்றம் கண்டனம்