தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மாநில அரசின் அதிகாரத்தில் வெட்கமின்றி மத்திய அரசு தலையிடுகிறது - மம்தா காட்டம் - மேற்குவங்க முதலமைச்சர்

கொல்கத்தா: மூன்று ஐபிஎஸ் அலுவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்ட விவகாரத்தில், மாநில அரசின் அதிகாரத்தில் வெட்கமின்றி மத்திய அரசு தலையிடுகிறது என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி விமர்சித்துள்ளார்.

Mamata Banerjee
Mamata Banerjee

By

Published : Dec 20, 2020, 6:26 PM IST

மூன்று ஐபிஎஸ் அலுவலர்களை மத்திய அரசு இடமாற்றம் செய்த விவகாரத்தில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தாவிற்கும், பாஜக தலைவர்களுக்கும் இடையே கடந்த சில நாட்களாக வார்த்தைப் போர் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இன்று (டிச.20) மம்தா வெளியிட்டிருந்த ட்விட்டர் பதிவில், ஐபிஎஸ் அலுவலர்களை இடமாற்றம் செய்ததன் மூலம் மாநில அரசின் அதிகாரத்தில் வெட்கமின்றி மத்திய அரசு தலையிடுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக ஆதரவு தெரிவித்த திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், சத்தீஷ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகல், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதலமைச்சர் அமரிந்தர் சிங், ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி என தெரிவித்துள்ளார்.

அடுத்தாண்டு மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. மாநிலத்தை கைப்பற்ற வேண்டும் என பாஜக தீவிர முயற்சியில் ஈடுபட்டுவருகிறது. அந்த வகையில், பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா பரப்புரைக்காக மேற்கு வங்கம் சென்றிருந்தார். அப்போது, அவரின் வாகனம் உள்பட பாஜகவின் முக்கிய தலைவர்களின் கார் மீது கல்வீச்சு நடத்தப்பட்டது.

இதைத் தொடர்ந்து, சம்பவம் நடைபெறும்போது அங்கு பொறுப்பிலிருந்த எஸ்பி போலாநாத் பாண்டே, எடிஜி ராஜீவ் மிஸ்ரா, டிஐஜி பிரவீன் குமார் திரிபாதி ஆகியோரை இடமாற்றம் செய்து மத்திய அரசு உத்தரவிட்டது.

இதையும் படிங்க: 3 ஐபிஎஸ் அலுவலர்கள் இடமாற்றத்தை திரும்பப் பெற ஸ்டாலின் வலியுறுத்தல்

ABOUT THE AUTHOR

...view details