தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

புதிய சாதனையுடன் தடுப்பூசி இலக்கை நோக்கி முன்னேறும் இந்தியா - கோவிட்-19 செய்திகள்

ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தை முழுமையாக நிறைவேற்ற அரசு முனைப்பு காட்டிவருகிறது.

Covid-19 vaccination
Covid-19 vaccination

By

Published : Sep 18, 2021, 8:09 AM IST

பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளான செப்டம்பர் 17ஆம் தேதி, நாடு முழுவதும் இரண்டரை கோடிக்கும் மேலான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. இதன்மூலம் ஒரே நாளில் அதிகபட்ச தடுப்பூசிகள் செலுத்திய சாதனையை இந்தியா படைத்துள்ளது.

நரேந்திர மோடியின் பிறந்தநாளில் இந்தியா வரலாறு படைத்துள்ளது என ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா இந்தச் சாதனையைப் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

இலக்கை நோக்கி முன்னேறும் இந்தியா

2021ஆம் ஆண்டு இறுதிக்குள் நாட்டில் உள்ள அனைவருக்கும் இரண்டு தடுப்பூசி தவணைகளையும் செலுத்திவிட வேண்டும் என ஒன்றிய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.

தடுப்பூசித் திட்டம் தொடங்கப்பட்ட ஆரம்ப மாதங்களில் தடுப்பூசி கிடைப்பதில் தட்டுப்பாடு நிலவியது. இந்தச் சுணக்கம் மெல்ல சீர் செய்யப்பட்டு, கடந்த இரு மாதங்களாகத் திட்டம் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

ஐரோப்பிய கண்டம் முழுவதும் இதுவரை செலுத்தப்பட்டுள்ளமொத்த தடுப்பூசி எண்ணிக்கையை இந்தியா தற்போது தாண்டியுள்ளது. அடுத்த மாதத்தில் 20 கோடி கோவிஷீல்டு டோஸ்களை தர சீரம் இந்தியா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதேபோல் பாரத் பயோடெக் நிறுவனமும் மூன்றரை கோடிக்கு மேல் தடுப்பூசி டோஸ்களை தரவுள்ளது.

தேர்தலுக்குள் இலக்கு எட்டப்படுமா?

அடுத்தாண்டு தொடக்கத்தில் ஐந்து மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. குறிப்பாக நாட்டின் அதிக மக்கள்தொகை எண்ணிக்கை கொண்ட மாநிலமான உத்தரப் பிரதேசம் இந்த ஐந்து மாநிலங்களில் ஒன்றாகும்.

எனவே, தேர்தல் நடைபெறும் உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் தடுப்பூசித் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற அரசு திட்டமிட்டுள்ளதாகச் சுகாதாரத் துறை அமைச்சக அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், அடுத்த மாதம் முதல் 12 வயதுக்கு மேற்பட்ட சிறார்களுக்குத் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கப்படும் என அரசுத் தரப்பு வட்டாரங்கள் கூறுகின்றன.

இதையும் படிங்க:தமிழ்நாடு ஆளுநராக ஆர்.என். ரவி இன்று பதவியேற்பு

ABOUT THE AUTHOR

...view details