கொல்கத்தா: 1950ஆம் ஆண்டு மிஷனரிஸ் ஆஃப் சாரிட்டி அமைப்பை, அன்னை தெரசா கொல்கத்தாவில் தொடங்கினார். இந்த அமைப்பின் மூலம் பல்லாயிரக்கணக்கானோர் பயனடைந்துவருகின்றனர்.
ஆனால் கிறிஸ்துமஸ் அன்று மத்திய அரசு இந்தியாவில் உள்ள அன்னை தெரசா தொண்டு நிறுவனத்தின் அனைத்து வங்கிக் கணக்குகளையும் முடக்கியதாகவும், இதனால் 22 ஆயிரத்திற்கும் அதிகமான நோயாளிகள், ஊழியர்கள் உணவு, மருந்துகள் இன்றி தவித்துவருவதாகவும் மம்தா குற்றம் சுமத்தியுள்ளார்.