பரபரப்பான புதுச்சேரி அரசியல் சூழலில் நாராயணசாமியின் அரசு கவிழும் சூழலில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரினார் நாராயணசாமி.
இதனையடுத்து சட்டப்பேரவையில் பேசிய நாராயணசாமி, "புதுச்சேரி மக்கள் எங்கள் ஆட்சி மீது நம்பிக்கை வைத்துள்ளார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது. புதுச்சேரியில் நடைபெறும் அனைத்தையும் மக்கள் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள்.
கிரண்பேடி தொடர்ந்து தொல்லை கொடுத்துவந்தார். கிரண்பேடி அளித்த நெருக்கடியைக் கடந்தும் ஆட்சியை நிறைவுசெய்துள்ளோம்" எனத் தெரிவித்துள்ளார்.
ஆட்சியைக் கவிழ்க்க சதி நடக்கிறது - நாராயணசாமி மேலும், "கடந்த என்.ஆர். காங்கிரஸ் ஆட்சி விட்டுச்சென்ற பணிகள், மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றினோம், நாங்கள் கோரிய நிதியை வழங்காததன் மூலம் புதுச்சேரி மக்களுக்கு மத்திய அரசு துரோகம் இழைத்துள்ளது.
தமிழ்நாடு, புதுச்சேரி, நாங்கள் இரு மொழி முறையைப் பின்பற்றுகிறோம், ஆனால் இந்தியை செயல்படுத்த பாஜக வலுக்கட்டாயமாக முயற்சிக்கிறது.
சட்டப்பேரவையில் முதலமைச்சர் நாராயணசாமி எம்எல்ஏக்கள் கட்சிக்கு விசுவாசமாக இருக்க வேண்டும். ராஜினாமா செய்த எம்எல்ஏக்கள் மக்களை எதிர்கொள்ள முடியாது, ராஜினாமா செய்த எம்எல்ஏக்களை மக்கள் சந்தர்ப்பவாதிகள் என்றுதான் அழைப்பர்" என்றும் நாராயணசாமி பேசினார்.