தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இரவு நேர ஊரடங்கை அமல்படுத்துங்கள்; மத்திய அரசு

நாடு முழுவதும் ஒமைக்ரான் தொற்று பரவல் அதிகரித்து வருவதால், மாநில அரசுகள் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்துமாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

night-curfew
night-curfew

By

Published : Dec 22, 2021, 4:18 PM IST

டெல்லி:கரோனா தொற்றின் இரண்டாம் அலை குறைந்துவரும் நிலையில், உலகம் முழுவதும் மெல்ல மெல்ல இயல்பு வாழ்க்கை திரும்பி வந்தது. இதனிடையே ஒமைக்ரான் வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.

தென் ஆப்பிரிக்காவில் அடையாளம் காணப்பட்ட ஒமைக்ரான் வெறும் 2 வாரத்தில் போட்ஸ்வானா, ஹாங்காங், சீனா, ஜப்பான், இந்தியா, பிரிட்டன் உள்ளிட்ட 91 நாடுகளுக்கு பரவியுள்ளது. இந்தியாவில் கடந்த வாரத்தில் 30 பேருக்கு மட்டுமே ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், இந்த வாரத்தில் 220ஆக அதிகரித்துள்ளது.

இதில், ஜம்மு-காஷ்மீரை சேர்ந்த மூன்று பேரும் அடக்கம். குறிப்பாக, இவர்கள் வெளிநாடுகளுக்குப் பயணமே செல்லாத நிலையில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மத்திய சுகாதாரத்துறை கடும் அதிர்ச்சியில் உள்ளது.

எனவே மாநில அரசுகள் விரைவில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளது. விரைவில் தமிழ்நாட்டில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படாம். ஏற்கனவே குஜராத்தில் இரவு நேர ஊரடங்கு தொடங்கிவிட்டது.

இதையும் படிங்க:ஒமைக்ரான் அச்சுறுத்தல்: குஜராத்தில் இரவு நேர ஊரடங்கு

ABOUT THE AUTHOR

...view details