டெல்லியில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய அவர், மத்திய அரசு தங்களது இத்தகைய நடவடிக்கைகள் மூலம் நாடாளுமன்ற நடைமுறையை முழுமையாக நிராகரிப்பதாக சாடினார். மேலும், "இந்திய வரலாற்றில் பெட்ரோல், டீசல் விலை ஒருபோதும் இந்த அளவுக்கு உயர்ந்ததில்லை. பொது விநியோக முறை மூலம் விற்கப்பட்ட மண்ணெண்ணெய் விலையும் தற்போது விண்ணைத் தொடுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளில் கலால் வரியாக மட்டும் அரசு 21 லட்சம் கோடி ரூபாயை வசூலித்துள்ளது" எனக் குற்றம் சாட்டினார்.
அவரைத் தொடர்ந்து பேசிய காங்கிரஸ் மூத்த தலைவரும் எம்பியுமான ஆனந்த் சர்மா, "மத்திய பாஜக அரசு, இந்தியப் பொருளாதாரத்தை மிக மோசமாகக் கையாண்டு பெரும் தவறிழைத்து விட்டது. இந்திய ஜனநாயகத்தின் உயரிய அமைப்பு ஒன்றையே இயல்பாக செயல்பட இந்த அரசு அனுமதிக்கவில்லை. நாட்டின் குடிமக்கள் குறித்த விஷயத்திலேயே எதிர்க்கட்சியினராகிய எங்களைக் குரல் எழுப்ப விடாமல் தொடர்ந்து எங்களது உரிமைகளை மறுத்து வருகிறது.