தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

வெளிநாட்டு பயணிகளுக்கு ஆர்டி-பிசிஆர் பரிசோதனை கட்டாயம் - அரசு உத்தரவு

சர்வதேச விமானப் பயணிகள் கட்டாயம் ஆர்டி பிசிஆர் பரிசோதனை செய்ய வேண்டும் என விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

Indian metros
Indian metros

By

Published : Dec 14, 2021, 8:50 PM IST

விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சகம் டெல்லி, மும்பை, சென்னை, ஹைதராபாத், பெங்களூரு, கொல்கத்தா ஆகிய ஆறு பெருநகர விமான நிலையங்களுக்கு சுற்றறிக்கை ஒன்று அனுப்பியுள்ளது.

அதில், "புதிய உருமாறிய தொற்றான ஒமைக்ரான் பரவல் காரணமாக புதிய வழிகாட்டு நெறிமுறைகளை அமைச்சகம் செயல்படுத்துகிறது.

அதன்படி, பாதிப்பு அதிகம் காணப்படும் பிரிட்டன், தென்னாப்பிரிக்கா, பிரேசில், போட்ஸ்வானா, சீனா, கானா, மொரிசியஸ், நியூசிலாந்து, ஜிம்பாவே, தான்சானியா, ஹாங்க் காங்க், இஸ்ரேல் ஆகிய நாடுகளில் இருந்து வரும் பயணிகள் கட்டாயம் ஆர்-டிபிஆர் பரிசோதனைக்காக முன்பதிவு செய்ய வேண்டும்.

வருகைக்கு முன்னதாக பயணிகள் முன்பதிவு செய்வதை சம்பந்தப்பட்ட விமான நிறுவனங்கள் உறுதிப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. ஒமைக்கரான் பரவல் காரணமாக தென்னாப்பிரிக்கா, பிரிட்டன், தென்கொரியா உள்ளிட்ட நாடுகள் பெரும் பாதிப்பை சந்தித்துவருகின்றன.

இந்தியாவில் இதுவரை 50க்கும் மேற்பட்ட ஒமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க:லக்கிம்பூர் கேரி சம்பவம் திட்டமிட்டு நடத்தப்பட்டது - விசாரணை குழு அறிக்கை

ABOUT THE AUTHOR

...view details