டெல்லி: அமலாக்க இயக்குநரகத்தின் (ED) இயக்குநர் மற்றும் மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) இயக்குநரின் பதவிக் காலத்தை 5 ஆண்டுகளாக நீட்டிக்கும் அவசரச் சட்டத்தை மத்திய அரசு ஞாயிற்றுக்கிழமை (நவ.14) கொண்டுவந்துள்ளது.
தற்போது, மத்திய விஜிலென்ஸ் ஆணையம் (சிவிசி) சட்டம், 2003 மூலம், சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை இயக்குநர் இரண்டு ஆண்டுகள் முதல் மூன்று ஆண்டுகள் வரை பதவியில் நியமிக்கப்பட்டனர்.