டூல்கிட் என்பது குறிப்பிட்ட விவகாரத்தின் முழுமையான தகவல்கள் அடங்கிய இணைய ஆவணமாகும். குறிப்பிட்ட விவகாரம் குறித்த தகவல்களை கோப்பாக தயாரித்து மக்களின் ஆதரவை கோருவதுடன் அதனை தீர்ப்பதற்கான வழிகளையும் அளிக்கிறது. ஒருவர் தயாரிக்கும் டூல்கிட்டை மற்றவர் தனக்கு தெரிந்த தகவல்களுடன் மாற்றி அமைக்கவும் இது வழிசெய்கிறது.
சமூகவலைதளங்களில் பகிரப்பட்டுவந்த வேளாண் சட்டங்கள் குறித்த டூல்கிட்டே குடியரசு தினத்தன்று நிகழ்ந்த வன்முறைக்கு காரணம் என டெல்லி காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. இந்த டூல்கிட் பெரும் பரபரப்பை ஏற்படுத்திவரும் நிலையில், பாகிஸ்தான், காலிஸ்தானுக்கு ஆதரவான கருத்துகளை ட்விட்டரிலிருந்து நீக்க அந்நிறுவனத்திற்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.