ஏர் இந்தியா உள்ளிட்ட பல்வேறு தளங்களில் இருந்து திருடப்பட்ட தகவல்கள் மூலம் பாதுகாப்புத் துறை உள்ளிட்ட பல்வேறு முக்கிய துறைகளில் உள்ள அலுவலர்களின் மெயில் ஐடி-களை ஹேக் செய்ய முயற்சி நடப்பதாக ஒன்றிய அரசு எச்சரித்துள்ளது.
இதுதொடர்பாக மத்திய அரசு ஊழியர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், "உயர் அலுவலர்களின் வாட்ஸ்அப் கணக்குகளுக்கும், மெசேஜ்களுக்கும் லிங்க் ஒன்றை அனுப்பி கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டது தொடர்பான தகவல்களை அளிக்குமாறு ஹேக்கர்கள் கேட்கின்றனர்.
அவ்வாறு அவர்கள் அனுப்பும் லிங்குகளை திறந்தால் ஒன்றிய அரசின் அதிகாரப்பூர்வ தளத்தைப் போலவே இருக்கும் போலி தளத்திற்கு அழைத்துச் செல்லப்படுகிறது.