நாட்டில் கரோனா வைரஸ் இரண்டாவது அலை தீவிரமாக இருக்கும் நிலையில், மத்திய விஸ்டா திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்துவதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. மத்திய அரசு தன்னுடைய விஸ்டா திட்டத்தை ஒதுக்கி வைத்து மக்களின் நலன் மீது கவனம் செலுத்த வேண்டும் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மத்திய விஸ்டா திட்டம் கிரிமினல் விரயம் - ராகுல் காந்தி குற்றஞ்சாட்டு - மத்திய விஸ்டா திட்டம் கிரிமினல் விரயம்
மத்திய விஸ்டா திட்டம் கிரிமினல் விரயம் என்று காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.
மத்திய விஸ்டா திட்டம்
இந்நிலையில், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது ட்விட்டரில், “ மத்திய விஸ்டா திட்டம் கிரிமினல் விரயம். மக்களின் உயிருக்கும், வாழ்க்கைக்கும் முக்கியத்துவம் அளியுங்கள். புதிய வீட்டைப் பெறுவதற்காக உங்கள் கண்மூடித்தனமான அகங்காரத்துக்கு முக்கியத்துவம் அளிக்காதீர்கள்” என குறிப்பிட்டுள்ளார்.