இந்தியாவில் 75ஆவது சுதந்திர தினம் 2023ஆம் ஆண்டு கொண்டாடப்படவுள்ள நிலையில், அதற்கு முன்னதாக தலைநகர் டெல்லியில் நாடாளுமன்றத்துக்கான புதிய கட்டடம் கட்டும் பணியில் ஒன்றிய அரசு முனைப்பு காட்டி வருகிறது.
’சென்டரல் விஸ்டா பகுதியில் புதிதாக 1,753 மரங்கள் நடப்படும்’ - சென்டரல் விஸ்தா பகுதியில் புதிதாக 1,753 மரங்கள் நடப்படும்
நாடாளுமன்றத்துக்கான புதிய கட்டடம் அமையவுள்ள ’சென்டரல் விஸ்டா’ பகுதியில் புதிதாக 1,753 மரங்கள் நடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
’சென்டரல் விஸ்டா’ என்ற பெயரில் செயல்பட்டுவரும் இந்தத் திட்டத்தின் கட்டுமான பணியின்போது பல்வேறு மரங்கள் வெட்டப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதனால் இத்திட்டம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு கொள்கைக்கு எதிரானது என பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்த சென்டரல் விஸ்டா திட்டத்தின் கீழ் புதிதாக 1,753 மரங்கள் நடப்படவுள்ளதாகவும், மேலும் தேசியத் தலைநகர் பகுதியில் (டெல்லி) சுமார் 36 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்கள் நடப்படவுள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் டெல்லியின் பசுமை பரப்பளவு வெகுவாக அதிகரிக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.