வடகிழக்கு பருவமழை தொடங்கியதிலிருந்தே மாநிலம் முழுவதும் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. அதனைத்தொடர்ந்து வங்கக் கடலில் உருவான ’நிவர்’ புயலானது, புதுச்சேரி அருகே கரையைக் கடந்தது. இதனால் புதுச்சேரி, டெல்டா மாவட்டங்கள், கடலூர், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், திருவண்ணாமலை, அரியலூர் மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது. இதில் பல வீடுகள் இடிந்ததுடன் கூரை, கீற்றோலை வீடுகள் கடும் சேதமடைந்தன.
நிவர் புயல் பாதிப்புகள்! - மத்திய குழு இன்று பார்வை! - நெல், கரும்பு, வாழை உள்ளிட்ட பயிர்கள் நீரில் மூழ்கின
நிவர் புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை நேரில் பார்வையிட மத்திய குழு இன்று தமிழகம் வருகிறது.
பல லட்சம் ஏக்கரிலான நெல், கரும்பு, வாழை உள்ளிட்ட பயிர்கள் நீரில் மூழ்கின. இது விவசாயிகளுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் மழைநீர் வீடுகளுக்குள் புகுந்தது. மீனவர்களுக்கும் பெரும் பாதிப்பை இப்புயல் ஏற்படுத்தியுள்ளது. நிவர் புயலால் மட்டும் நான்கு பேர் உயிரிழந்தனர். 3 பேர் காயமடைந்தனர். இந்நிலையில், நிவர் புயல் சேதங்களைக் கணக்கிட மத்திய அரசின் குழு இன்று (டிச. 05) தமிழ்நாடு வருகிறது. பாதிப்புக்குள்ளான பகுதிகளுக்கு நேரடியாக செல்லும் அக்குழு, ஆய்வு செய்து மத்திய அரசிடம் அறிக்கை அளிக்கவுள்ளது.
இதையும் படிங்க: மழையால் இடிந்து விழுந்த கட்டடம்: நல்வாய்ப்பாக உயிர்பிழைத்த முதியவர்