தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

புதுச்சேரி வேளாண் துறை இயக்குநரை முற்றுகையிட்டு விவசாயிகள் வாக்குவாதம் - புதுச்சேரி பாகூர் பகுதியில் மழை வெள்ள பாதிப்புகள் ஆய்வு

புதுச்சேரி (Puducherry) பாகூர் பகுதியில் மழை வெள்ள பாதிப்புகளைப் பார்வையிட மத்திய குழுவினருடன் வந்த வேளாண் துறை இயக்குநரை விவசாயிகள் (Farmers) முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி
புதுச்சேரி

By

Published : Nov 23, 2021, 1:14 PM IST

புதுச்சேரி: கடந்த சில நாள்களாகப் பெய்த தொடர் மழையால் புதுச்சேரியில் 7000 ஏக்கர் விலைநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. வீடுகள், சாலைகள் சேதமடைந்துள்ளன. இந்நிலையில் மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வுசெய்ய மத்திய உள் துறை அமைச்சகத்தின் இணைச் செயலர் ராஜீவ் சர்மா தலைமையிலான நான்கு பேர் கொண்ட குழு (central team) நேற்று (நவம்பர் 22) மாலை புதுச்சேரி வந்தது.

தலைமைச் செயலர், மாவட்ட ஆட்சியர்கள், அரசுத் துறை அலுவலர்களுடன் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்டனர். அதன்பின் துணைநிலை ஆளுநர் தமிழிசை, முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோரைத் தனித்தனியே சந்தித்த மத்திய குழுவினர் வெள்ள பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தனர்.

மத்திய குழுவினர் ஆய்வு

தொடர்ந்து இன்று (நவம்பர் 23) காலை மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் சென்று ஆய்வுசெய்தனர். முதலாவதாக பிள்ளைச்சாவடி மீனவ கிராமத்திற்குச் சென்ற மத்திய குழுவினர் அங்கு மழை, கடல் சீற்றத்தால் ஏற்பட்ட பாதிப்புகளைப் பார்வையிட்டனர்.

பொதுமக்களிடம் சேதங்கள் குறித்து கேட்டறிந்தனர். பின் இந்திராகாந்தி சதுக்கத்தில் ஏற்பட்ட சாலை பாதுகாப்பு, இடையார்பாளையம் என்.ஆர். நகர் பகுதியில் வெள்ளத்தில் சேதமடைந்த வீடுகள் ஆகியவற்றை ஆய்வுசெய்தனர்.

வேளாண் துறை இயக்குநரிடம் வாக்குவாதம்

தொடர்ந்து புதுச்சேரியின் (Puducherry) நெற்களஞ்சியம் என்றழைக்கப்படும் பாகூர் பகுதிக்குச் சென்று மழையால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களைப் பார்வையிட்டனர். அப்போது மத்திய குழுவினருடன் சென்ற வேளாண் துறை இயக்குநர் பாலகாந்தியை விவசாயிகள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விளைநிலங்களையும், விவசாயிகளையும் இதுவரை பார்வையிட வராத இயக்குநர் ஏன் இப்போது மட்டும் வந்துள்ளார் எனக் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மத்திய குழுவினரை வரவேற்கிறோம், ஆனால் வேளாண் இயக்குநர் பார்வையிட வரக்கூடாது எனக் கூறி கோஷம் எழுப்பினர்.

இதைத் தொடர்ந்து விவசாயிகளை அலுவலர்கள் சமாதானம் செய்துபின் அங்கிருந்து கலைந்துசென்றனர். பின் பாகூரில் ஆய்வினை முடித்துக்கொண்டு மத்திய குழுவினர் கடலூர் புறப்பட்டுச் சென்றனர்.

இதையும் படிங்க: Galwan Valley clash: தமிழ்நாட்டைச் சேர்ந்த ராணுவ வீரருக்கு வீர் சக்ரா விருது!

ABOUT THE AUTHOR

...view details