பெங்களூரு:கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி அதிருப்தி எம்எல்ஏக்கள் பலர் அக்கட்சிகளிலிருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ளதால், அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பாக மத்திய பாஜக தலைமையே முடிவு செய்யும் என கர்நாடகா முதலமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
'அமைச்சரவை விரிவாக்கம் குறித்து மத்திய பாஜக தலைமை முடிவு செய்யும்' - முதலமைச்சர் எடியூரப்பா - கர்நாடகா அமைச்சரவை விரிவாக்கம்
கர்நாடகா அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பாக மத்திய பாஜக தலைமை முடிவு செய்யும் என அம்மாநில முதலமைச்சர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் எடியூரப்பா
முன்னதாக முதலமைச்சரை நேரில் சந்தித்த பாஜக எம்எல்சி ஆர். சங்கர், அமைச்சரவை விரிவாக்கம் இன்னும் மூன்று நாட்களில் நடைபெறும் என்றும், தனக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் என தெரிவித்தார். இதனையடுத்து, அமைச்சரவை விரிவாக்கம் அல்லது அமைச்சரவை மறுசீரமைப்பு செய்வது தொடர்பான எந்த ஆலோசனையும் நடைபெறவில்லை என முதலமைச்சரின் அலுவலரும், எம்எல்ஏவுமான எம்.பி.ரேணுகாச்சார்யா விளக்கம் அளித்திருந்தார்.
இதையும் படிங்க:இந்தியாவுக்கு துப்பாக்கிகளை வழங்கும் அமெரிக்க கப்பற்படை