தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

வெப்ப அலை நிலவும் மாநிலங்களுக்கு உதவி... மன்சுக் மாண்டவியா! - மன்சுக் மாண்டவியா

நிலவும் வெப்ப நிலை சூழலை சமாளிக்க உத்தரபிரதேசம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களுக்கு மத்திய அரசின் குழு அனுப்பி வைக்கப்படும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்தார்.

Mansuk Mandavya
Mansuk Mandavya

By

Published : Jun 20, 2023, 5:36 PM IST

டெல்லி :அதிக வெப்ப அலை வீசும் உத்தரபிரதேசம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களுக்கு உதவ ஐசிஎம்ஆர், தேசிய பேரிடர் மீட்பு படை, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அதிகாரிகள் அடங்கிய மத்திய சுகாதாரக் குழு அனுப்பி வைக்கப்படும் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்து உள்ளார்.

நாட்டில் நிலவும் அதிகபட்ச வெப்ப அலை சூழலை சமாளிப்பது குறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமையிலான உயர் மட்ட அலோசனைக் கூட்டம் தலைநகர் டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மத்திய சுகாதார அமைச்சகம், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், இந்திய வானிலை ஆய்வு மையம், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

நாட்டில் நிலவும் வெப்ப அலை அதிகரிப்பு தடுப்பு பணி, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், விழிப்புணர்வு குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. நாட்டில் வெப்ப அலைகளின் தாக்கத்தை குறிப்பிட்ட குறுகிய, மற்றும் நீண்ட கால செயல் திட்டங்களுடன் கட்டுப்படுத்துவது குறித்து இந்திய ஆராய்ச்சி மற்றும் மருத்துவ கவுன்சில் அதிகாரிகள் ஆராய்ச்சி மேற்கொள்ளுமாறும் அமைச்சர் மன்சுக் மாண்டவியா உத்தரவிட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கோடை காலத்தை முன்னிட்டு வெப்ப அலைகள் தொடர்பான நோய்களுக்கு தீர்வு காண மத்திய அரசு உரிய நேரத்தில் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளதாக அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்தார். மேலும் பிரதமர் மோடி தலைமையில், கடந்த மார்ச் மாதத்தில் கோடை வெயிலை சமாளிப்பது மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்தார்.

மேலும், கோடை வெயில் மற்றும் வெப்ப அலையை சமாளிப்பது குறித்த ஆலோசனை அறிக்கையை கடந்த பிப்ரவரி மாதம் மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டதாக அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்தார். மேலும் அத்தியாவசிய மருந்துகள், உயிர் காக்கும் கருவிகள் கையிருப்பின் அடிப்படையில் சுகாதார வசதிகளை மறுபரிசீலனை செய்ய மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டதாகவும் போதிய அளவில் உப்பு சர்க்கரை கரைசல் உள்ளிட்ட மருந்துப் பொருட்களை கையிருப்பு வைக்க அறிவுறுத்தியதாகவும் அவர் கூறினார்.

நாட்டில் நிலவும் வெப்ப சூழல் உயிரிழப்புகளை தவிர்க்கவும், வெப்ப அதிகரிப்பு தொடர்பான நோய்களுக்கான தேசிய செயல் திட்டம், அனைத்து மாநிலங்களுடனும் பகிரப்பட்டதாக அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்தார். பல்வேறு மாநிலங்களில் வெப்ப அலையின் நிலை குறித்தும், சரியான நேரத்தில் மற்றும் சுகாதார சேவைகளை வழங்குவதற்கு தேவையான மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருத்துவமனை உள்கட்டமைப்புகள் கிடைப்பது குறித்தும் மத்தியக் குழுக்கள் தயார் நிலையில் இருப்பது தொடர்பாகவும் மன்சுக் மாண்டவியா ஆலோசனை நடத்தினார்.

வெப்ப அலை தொடர்பாக மக்களுக்கு எளிதில் புரிதல் ஏற்படும் வகையில் நாள்தோறும் வானிலை அறிக்கைகளை வெளியிடுமாறு இந்திய வானிலை ஆராய்ச்சி மையத்திற்கு மன்சுக் மாண்டவியா உத்தரவிட்டார். வெப்பநிலை அதிகரிக்கும் மாநில அரசுகளுக்கு உதவ பேரிடர் மேலாண்மை மற்றும் இந்திய வானிலை ஆய்வு மையத்துடன் இணைந்த மத்திய சுகாதார அமைச்சகத்தின் அதிகாரிகள் கொண்ட குழு அனுப்பி வைக்கப்படும் என்று மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்தார்.

மேலும், ஹீட் ஸ்ட்ரோக் காரணமாக ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க ஆராய்ச்சி மேற்கொள்ளுமாறு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார். கூட்டத்தில் சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷன், சுதன்ஷ் பந்த், டாக்டர் ராஜீவ் பால், சுகாதார அமைச்சக சிறப்பு செயலாளர் எஸ். கோபாலகிருஷ்ணன், எய்ம்ஸ் இயக்குனர் ஸ்ரீநிவாஸ், இந்திய மருத்துவ கவுன்சில் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க :Modi US visit: பிரதமர் மோடி - எலான் மஸ்க் சந்திப்பு! இந்தியாவில் டெஸ்லா கிளை?

ABOUT THE AUTHOR

...view details