தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பான்  - ஆதார் கார்டு இணைக்க ஜூன் 30ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு - ஆதார் கார்டு

பான் கார்டை ஆதாருடன் இணைப்பதற்கான அவகாசம் ஜூன் 30ஆம் தேதிவரை நீட்டிக்கப்படுவதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

Central Govt
பான்  - ஆதார் கார்ட்

By

Published : Mar 31, 2021, 9:46 PM IST

ஆதார் கார்டுடன் பான் கார்டை இணைப்பதற்கான கால அவகாசம் இன்றோடு நிறைவடைய இருந்த நிலையில், ஜூன் 30ஆம் தேதி வரை, அதனை நீட்டித்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று மத்திய நேரடி வரிகள் வாரியம் கடந்த 2017ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதி அறிவிக்கை வெளியிட்டது. அதன்பிறகு ஆதார்-பான் இணைப்புக்கான அவகாசம் பல முறை நீட்டிக்கப்பட்டது.

குடிமக்களுக்கு ஆதார் அட்டை வழங்குவதற்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் வருமான வரி செலுத்துவதற்கு ஆதார் எண் கட்டாயம் என்றும் தீர்ப்பளித்தது.

பல முறை ஆதார் பான் இணைப்பிற்கான கால அவகாசத்தை நீட்டிப்பு செய்த மத்திய அரசு இந்த முறை நீட்டிக்காமல் மார்ச் 31ஆம் தேதிக்குள் இணைக்க வேண்டும் என திட்டவட்டமாகத் தெரிவித்தது. மார்ச் 31-க்குள் ஆதார் - பான் எண் இணைக்காவிட்டால், பான் கார்டு செல்லாது எனவும் அறிவித்திருந்தது.

இந்நிலையில், பான் கார்டை ஆதாருடன் இணைப்பதற்கான அவகாசம் ஜூன் 30ஆம் தேதிவரை நீட்டிக்கப்படுவதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. கரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதால், கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர்.

இதையும் படிங்க:கருத்துக்கணிப்பு அல்ல கருத்துத்திணிப்பு; ஊடகங்கள் மீது ஓபிஎஸ்-இபிஎஸ் பாய்ச்சல்!

ABOUT THE AUTHOR

...view details