தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

டெல்லியின் உட்கட்டமைப்புகளை மத்திய அரசு நவீனமாக்கியுள்ளது - பிரதமர் மோடி! - டெல்லியில் பிரகதி மைதானத்தின் ஒருங்கிணைந்த போக்குவரத்து வழித்தடம்

டெல்லியின் உட்கட்டமைப்புகளை நவீனமயமாக்கி, அதன் முகத்தையே மத்திய அரசு மாற்றியுள்ளது என பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்தார்.

PM Modi
PM Modi

By

Published : Jun 19, 2022, 7:34 PM IST

டெல்லியில் பிரகதி மைதானத்தின் ஒருங்கிணைந்த போக்குவரத்து வழித்தடம், 920 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது. பிரகதி மைதானத்தில் அமைக்கப்பட்டு வரும் உலகத்தரம் வாய்ந்த கண்காட்சி மற்றும் மாநாட்டு மையத்திற்கு வருபவர்களுக்கு போக்குவரத்து இடையூறு ஏற்படாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவே இந்த ஒருங்கிணைந்த வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது. முழுமையாக மத்திய அரசின் நிதியால் கட்டப்பட்ட, இந்த ஒருங்கிணைந்த வழித்தடத்தின் முக்கிய சுரங்கப்பாதை மற்றும் ஐந்து பாதாள சாலைகளை பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜூன் 19) திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, "டெல்லியில் போக்குவரத்து பிரச்சினைகளை தீர்ப்பதற்காக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. மத்திய அரசு டெல்லிக்கு அழகான உட்கட்டமைப்பு வசதிகளை பரிசளித்துள்ளது. பிரகதி மைதானத்தின் ஒருங்கிணைந்த போக்குவரத்து வழித்தடம், 55 லட்சம் லிட்டர் எரிபொருளை மிச்சப்படுத்தவும், காற்றுமாசை குறைக்கவும் உதவும். இன்று திறந்து வைக்கப்பட்ட சுரங்கப்பாதை, மதுரா சாலை மற்றும் பைரன் மார்க் ஆகிய இடங்களில் ஏற்படும் கடுமையான போக்குவரத்தை தவிர்க்க உதவும். நகரமயமாக்கலை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி, மக்களின் வாழ்க்கையை எளிமையாக்குவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அரசு மக்களுக்காக 100 ரூபாயை வழங்கினால் அதனை தலைப்புச் செய்தியாக்குகிறார்கள், ஆனால் அதே அரசு மக்களின் 200 ரூபாயை மிச்சப்படுத்தினால் அதைப்பற்றி யாரும் பெரிதாக பேசுவதில்லை" என்று தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details