தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

புதுச்சேரியில் மத்திய பட்ஜெட் நகல் எரிப்பு போராட்டம்! - தொழிலாளர் சட்ட தொகுப்புகள்

புதுச்சேரி: அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் தொழிலாளர் சட்ட தொகுப்புகள் மற்றும் மத்திய பட்ஜெட் நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது.

புதுச்சேரியில் மத்திய பட்ஜெட் நகல் எரிப்பு போராட்டம்!
புதுச்சேரியில் மத்திய பட்ஜெட் நகல் எரிப்பு போராட்டம்!

By

Published : Feb 3, 2021, 7:42 PM IST

மத்திய அரசின் தொழிலாளர் விரோத, தொழிலாளர் சட்ட தொகுப்பு நகலையும், பட்ஜெட் நகலையும் எரிக்கும் போராட்டத்தை நாடு தழுவிய அளவில் நடத்திட மத்திய தொழிற்சங்கங்கள் முடிவு செய்தது. அதன்படி புதுச்சேரியில் ஏஐடியூசி, சிஐடியூ, அரசு ஊழியர் சம்மேளனம் ஆகிய சங்கங்கள் சார்பில் தொழிலாளர் சட்ட தொகுப்புகள், மத்திய பட்ஜெட் நகல் எரிப்பு போராட்டம் இன்று(பிப்.3) மிஷன் வீதியில் நடைபெற்றது.

போராட்டத்தின் போது தொழிலாளர்களை அடிமைப்படுத்தும் தொழிலாளர் சட்ட தொகுப்புகளை திரும்பப் பெறவும், மின்சாரத்தை தனியார் மயமாக்கும் மின்சார சட்டம் 2020 திரும்பப் பெறக் கோரியும், மத்திய பட்ஜெட்டில் தேசத்தின் சொத்துக்களை விற்பதற்கும், கார்ப்பரேட் கொள்ளைக்கு அனுமதி அளிக்கும் அம்சங்களை திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பட்ஜெட் நகல் ஏரிப்பு போராட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு தொழிற்சங்கங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க:புதுச்சேரியில் பிப்ரவரி 16ஆம் தேதி முழு கடையடைப்பு போராட்டம்!

ABOUT THE AUTHOR

...view details