டெல்லி : வெளிநாடுகளுக்கு பாஸ்மதி அரிசி அல்லாத மற்ற அரிசி வகைகளை ஏற்றுமதி செய்யப் மத்திய அரசு தடை விதித்து உள்ளது. உள்நாட்டு விநியோகத்தை ஊக்குவிக்கவும், விலை ஏற்றத்தை தவிர்க்கவும் பாஸ்மதி அல்லாத அரிசி வகைகளை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடை விதித்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் வெளியிட்டு உள்ள அறிக்கையில், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் ஒட்டுமொத்த அரிசி வகைகளில் பாஸ்மதி இல்லாத மற்ற அரிசி வகைகள் மட்டும் 25 சதவீதம் என்ற அளவில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. உள்நாட்டு விலை ஏற்றம், தட்டுபாடு, பற்றாக்குறை ஏற்படுவதை தவிர்க்கவும், உள்நாட்டு விநியோகத்தை ஊக்குவிக்கும் வகையிலும் பாஸ்மதி அரிசி அல்லாத மற்ற வெள்ளை அரிசி வகைகளை ஏற்றுமதி கொள்கை இலவசம் என்பதில் இருந்து தடை செய்யப்பட்டு திருத்தப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அடுத்தடுத்து வரும் திருவிழாக் காலங்களை கருத்தில் கொண்டு உள்நாட்டு சப்ளையை ஊக்குவிக்கவும், சில்லரை விலையை கட்டுக்குள் வைத்து இருக்கவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதேநேரம் வேக வைக்காத பாஸ்மதி அரிசி மற்றும் பாஸ்மதி அரிசியை மொத்த அளவில் ஏற்றுமதி செய்வதற்கான ஏற்றுமதி கொள்கையில் எந்தவிதமான திருத்தமும் மேற்கொள்ளபடவில்லை என மத்திய உணவுத் துறை தெரிவித்து உள்ளது.