தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கரோனாவுக்கு பிந்தைய பாதிப்பு: மத்தியக் கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் மருத்துவமனையில் அனுமதி - தேசிய செய்திகள்

61 வயது நிரம்பிய ரமேஷ் பொக்ரியாலுக்கு கடந்த ஏப்ரல் 21ஆம் தேதி கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து அவர் தொற்றிலிருந்து சில நாள்களில் மீண்டு, தன் பணிக்குத் திரும்பினார்.

ரமேஷ் பொக்ரியால்
ரமேஷ் பொக்ரியால்

By

Published : Jun 1, 2021, 2:30 PM IST

Updated : Jun 1, 2021, 3:16 PM IST

கரோனா தொற்றின் பிந்தைய சிக்கல்கள் காராணமாக மத்தியக் கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இன்று (ஜூன்.01) அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து தகவல்கள் எதுவும் இதுவரை பகிரப்படவில்லை.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பலருக்கும் தொற்றிலிருந்த மீண்டு வந்த முதல் சில மாதங்களுக்கு கரோனா தொற்றின் பிந்தைய சிக்கல்கள் தொடர்ந்து வருகிறது. அவ்வகையில், மத்தியக் கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், பிந்தைய கரோனா பாதிப்புகள் காரணமாக இன்று காலை 11.30 மணியளவில் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

61 வயது நிரம்பிய ரமேஷ் பொக்ரியாலுக்கு முன்னதாக கடந்த ஏப்ரல் 21ஆம் தேதி கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து அவர், தொற்றிலிருந்து சில நாள்களில் மீண்டு தன் பணிக்குத் திரும்பினார். தான் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதை அப்போது ரமேஷ் பொக்ரியால் தன் ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Last Updated : Jun 1, 2021, 3:16 PM IST

ABOUT THE AUTHOR

...view details