டெல்லி : மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு கரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், அவர் வீட்டுத் தனிமையில் வைக்கப்பட்டு உள்ளார். டெல்லியில் நடைபெறும் இந்திய ராணுவத்தின் படை தளபதிகள் மாநாட்டில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொள்ள இருந்தார்.
லேசான அறிகுறிகள் தென்பட்டதை அடுத்து அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவருக்கு தொற்று உறுதியாகி இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. லேசான அறிகுறிகள் தென்படும் நிலையில் வீட்டில் தனிப்படுத்தப்பட்டு உள்ள ராஜ்நாத் சிங் ஓய்வெடுக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.