தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 11, 2021, 12:35 PM IST

ETV Bharat / bharat

நீதிமன்றங்கள் தலையிடும்வரை அரசாங்கம் மனிதாபிமானத்துடன் செயல்படுவதில்லை!

ஆக்ஸிஜன் மற்றும் வென்டிலேட்டர்கள் கிடைக்காததால் நமது நாட்டில் நூற்றுக்கணக்கான மக்கள் இறந்துள்ளனர் என்பது அறியும்போது இதயம் கனக்கிறது. உதவிக்காகப் பலமுறை வேண்டுகோள் விடுத்தபின், பொறுமையை இழந்த மாநில அரசுகள் ஆக்ஸிஜனுக்கான சட்டப் போர்களைத் தொடங்கின. நீதிமன்றங்களால் விசாரிக்கப்படும்வரை அலுவலர்கள் செயல்பட  தவறியது ஏற்கத்தக்கதல்ல.

covid policy
நீதிமன்றங்கள்

மொத்த மனிதகுலமும் கோவிட்-19க்கு எதிராக ஒரு பெரிய போரை நடத்தி வருகிறது. உலகெங்கிலும் உள்ள 174 நாடுகளில் உள்ள மக்களுக்கு ஏற்கனவே 125 கோடி அளவிற்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அனைவரும் பாதுகாப்பாக இல்லாத வரை யாரும் பாதுகாப்பாக இல்லை என்று ஏற்கனவே கூறியுள்ள உலக சுகாதார அமைப்பு, பணக்கார நாடுகளில் தடுப்பூசி போடுவது ஏழை நாடுகளில் தடுப்பூசி போடுவதை விட 25 மடங்கு அதிக வேகத்தில் தொடர்கிறது என்று சுட்டிக்காட்டியது. தடுப்பூசி ஏற்றத்தாழ்வு என்பது உலகின் தற்கொலைக்கு சமம் என்றும் WHO எச்சரித்துள்ளது.

தடுப்பூசி விஷயத்தில் பின்னடைவு

கடந்த அக்டோபரில், இந்தியாவும் தென்னாப்பிரிக்காவும் தடுப்பூசி தொடர்பான காப்புரிமை தொடர்பான விவாதங்களை ஒதுக்கி வைத்து, உலகின் அனைத்து நாடுகளுக்கும் விரைவான மற்றும் மலிவான தடுப்பூசி கிடைக்க வேண்டும் என்று கோரியிருந்தன. உலகின் மிகப்பெரிய வல்லரசான அமெரிக்கா, தற்போது இந்தத் திட்டத்தை ஏற்கவில்லை என்றாலும், இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அனைத்து சிக்கல்களையும் விவாதித்த பின்னர் ஒரு நியாயமான கொள்கையை உருவாக்க சில மாதங்கள் ஆகும்.

மக்கள்தொகையைப் பொறுத்தவரை, இந்தியா உலகின் பல நாடுகளின் மக்கள்தொகைக்கு சமமாக உள்ளது. மேலும், உலகில் உற்பத்தி செய்யப்படும் தடுப்பூசியில் 60 விழுக்காட்டை உற்பத்தி செய்கிறது. இருப்பினும் தொலைநோக்கு பார்வை இல்லாத காரணத்தால், கோவிட் தடுப்பூசி விஷயத்தில் நாடு பின்னடைவைச் சந்தித்துள்ளது.

45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்குத் தடுப்பூசி போடுவதற்கான பொறுப்பை மத்திய அரசு ஏற்றுக்கொண்ட போதிலும், ஒரு மாதத்திற்கு முன்பு வழங்கப்பட்ட தடுப்பூசிகளுடன் ஒப்பிடும்போது, அதன் தற்போதைய தடுப்பூசிகள் பாதியாக குறைந்துவிட்டன. மே 1 முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடுவதற்கான திட்டத்திற்கும் சறுக்கல் ஏற்பட்டது.

விரிவாந தடுப்பூசி கொள்கை

ஒரு மாதத்திற்கு 10 கோடி முதல் 11 கோடி அளவுகள் உற்பத்தி செய்யும் நிலையை அடைய இன்னும் ஒரு மாதம் ஆகும் என்பது கவலைக்குரிய விஷயம். ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள 12 மாநிலங்களில் பேரழிவை ஏற்படுத்தி வரும் கோவிட் சுனாமி, ஜூன் இறுதிவாக்கில் மட்டுமே குறையும் என்பது கவலையளிக்கிறது. இந்த கடினமான சூழ்நிலையில், நீதித்துறை எதிர்கால சூழ்நிலைக்கு ஏற்ப முன்கூட்டி செயல்படுவது ஒன்றே நம்பிக்கை ஒளியாக இருந்து வருகிறது.

தற்போதைய வேகத்தில், நாட்டில் 18 வயதுக்கு மேற்பட்ட 80 கோடி மக்களுக்குத் தடுப்பூசி போட குறைந்தபட்சம் எட்டு மாதங்கள் ஆகும். மத்திய அரசின் தடுப்பூசி கொள்கை, மக்களின் வாழ்வதற்கான உரிமையைத் தகர்த்து வருவதாக உச்ச நீதிமன்றம் சமீபத்தில் கூறியது. இப்போது ஒரு விரிவான தடுப்பூசி கொள்கையை வகுக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

மத்திய அரசு இலவச தடுப்பூசித் திட்டத்தை முன்பு போலவே தொடர வேண்டும் என்றாலும், மாநிலங்கள் அடிப்படை மருத்துவ உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும் மருத்துவமனைகளை மேம்படுத்துவதற்கும் கவனம் செலுத்த வேண்டும் என்று ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் சி.ரங்கராஜன் அறிவுறுத்தியுள்ளார்.

அவரது அறிவுரைகளை கண்டிப்பாக செயல்படுத்த வேண்டும். மற்ற நாடுகளில் 50 விழுக்காடு சோதனைகளை மேற்கொள்வதன் மூலம் கோவிட் பாதிக்கப்பட்டவர்களை கண்டறியக்கூடிய நிலையில், இந்தியாவில் 20 விழுக்காடு சோதனைகளை மட்டுமே நடத்த முடிந்தது. இந்த அலட்சியப்போக்கு கோவிட் வைரஸுக்கு புதிய பலத்தை அளித்தது.

ஆக்ஸிஜன் மற்றும் வென்டிலேட்டர்கள் கிடைக்காததால் நமது நாட்டில் நூற்றுக்கணக்கான மக்கள் இறந்துள்ளார்கள் என்பது அறியும்போது இதயம் கனக்கிறது. உதவிக்காக பலமுறை வேண்டுகோள் விடுத்தபின், பொறுமையை இழந்த மாநில அரசுகள் ஆக்ஸிஜனுக்கான சட்டப் போர்களை தொடங்கின. நீதிமன்றங்களால் விசாரிக்கப்படும்வரை அலுவலர்கள் செயல்பட தவறியது ஏற்கத்தக்கதல்ல.

மனிதாபிமானத்துடன் செயல்படவில்லை

அரசு மருத்துவமனைகளில் ஐ.சி.யுக்கள் மற்றும் பொதுவான படுக்கைகளின் விகிதத்தின் அடிப்படையில் ஆக்ஸிஜன் ஒதுக்கீட்டை ஒதுக்கியுள்ளதாக மத்திய அரசு முன்வைத்த வெற்று வாதத்தை ஏற்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. இது மேலும் மத்திய அரசின் ஆக்ஸிஜன் ஒதுக்கீட்டுக் கொள்கையை மறுபரிசீலனை செய்யவும் அழைப்பு விடுத்துள்ளது.

அடுத்த கட்ட கோவிட் எழுச்சியில் குழந்தைகளும் பலியாகக்கூடும் என்பதை சுட்டிக்காட்டும் ஆய்வுகளை குறிப்பிட்டு, சவாலை எதிர்கொள்ள ஆயத்த ஏற்பாடுகளை செய்யுமாறு உச்ச நீதிமன்றம் கோரியுள்ளது. ஆக்ஸிஜன் உற்பத்தி சாதனங்களில் ஜிஎஸ்டியைத் தளர்த்த மத்திய அரசு மறுத்தபோது, அதில் நீதிமன்றங்கள் தலையிட வேண்டியிருந்தது. நீதிமன்றங்கள் அதில் தலையிடும்வரை விலைகுறைப்பில் அரசாங்கம் மனிதாபிமானத்துடன் செயல்படவில்லை என்பது துரதிருஷ்டவசமானது.

ABOUT THE AUTHOR

...view details