தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ரூ.85 ஆயிரம் கோடி மதிப்பிலான ஆயுதக் கொள்முதல் - பாதுகாப்பு கவுன்சில் ஒப்புதல்! - மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்

இந்திய கடற்படைக்கு அடுத்த தலைமுறை ரோந்து கப்பல் கொள்முதல் உள்ளிட்ட 84 ஆயிரத்து 328 கோடி ரூபாய் மதிப்பிலான 24 மூலதன கொள்முதல் பரிந்துரை திட்டங்களுக்கு மத்திய பாதுகாப்பு கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது.

ராஜ்நாத் சிங்
ராஜ்நாத் சிங்

By

Published : Dec 23, 2022, 10:59 PM IST

டெல்லி: பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் 84 ஆயிரத்து 328 கோடி ரூபாய் மதிப்பிலான 24 மூலதன கொள்முதல் பரிந்துரை திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்திய ராணுவம், விமானப் படைக்கு தலா 6 திட்டம், கடற்படைக்கு 10 மற்றும் கடலோர காவல்படைக்கு 2 என மொத்தம் 24 மூலதன கொள்முதல் பரிந்துரைகளுக்கு பாதுகாப்பு கவுன்சில் ஒப்புதல் வழங்கி உள்ளது.

இந்திய ராணுவத்திற்கு புதிய ரேஞ்ச் ஏவுகணை அமைப்புகள், நீண்ட தூர அதிவேக வெடிகுண்டுகள், வழக்கமான போர்க் கப்பல்களுக்கான ரேஞ்ச்-மேம்படுத்தும் கருவிகள் மற்றும் மேம்பட்ட கண்காணிப்பு அமைப்புகளை வாங்கவும்; இதனைக்கொண்டு இந்திய விமானப்படையினை மேலும் பலப்படுத்தவும் பாதுகாப்பு அமைச்சகம் உறுதியளித்துள்ளது.

போர் வாகனங்கள், இலகுரக டாங்கிகள் உள்ளிட்ட தளவாடங்கள் மற்றும் உபகரணங்கள், வீரர்களுக்கு தேவையான சிறந்த பாதுகாப்பு நிலை கொண்ட பாலிஸ்டிக் ஹெல்மெட் உள்ளிட்டப் பொருட்கள் வாங்க திட்டமிடப்பட்டு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடற்படைக்குத் தேவையான கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள் உள்ளிட்ட பாதுகாப்பு கவசங்களை வாங்க திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 82 ஆயிரத்து 127 கோடி ரூபாய் மதிப்பிலான 21 முன்மொழிவுகள் மேக் இன் இந்தியா திட்டத்தில் உள்நாட்டிலேயே தயாரித்து கொள்முதல் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் தற்சார்பு இந்தியா என்ற இலக்கை அடைய பாதுகாப்புத் துறைக்கு கணிசமான ஊக்கத்தை அளிக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. விரைவில் இந்தியாவும், பாகிஸ்தானும் வீர் கார்டியன்- 23 என்ற போர் ஒத்திகையில் ஈடுபட உள்ளதாக பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் மன்சுக் மாண்டவியா ஆலோசனை

ABOUT THE AUTHOR

...view details