நாடு முழுவதும் பத்தாண்டுக்கு ஒருமுறை சென்சஸ் (மக்கள் தொகை கணக்கு) எடுக்கப்பட்டு வரும் நிலையில், கடந்த 2011ஆம் ஆண்டு கடைசியாக சென்சஸ் எடுக்கப்பட்டது. இதனையடுத்து, இந்தாண்டில் சென்சஸ் எடுக்கப்பட உள்ளது. இந்நிலையில், 2011இல் எடுக்கப்பட்ட சென்சஸ் விவரம் எங்கே என்று நாடாளுமன்ற கூட்டத்தொடரில் எம்பி. அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பினார்.
இதற்குப் பதிலளித்துள்ள உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய், "2011 இல் எடுக்கப்பட்ட சென்சஸ் ரீப்போட், சாதி தரவு இல்லாமல் கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஊரக வளர்ச்சி அமைச்சகத்தால் இறுதி செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. சாதி தரவை வகைப்படுத்துவதற்காகச் சம்பந்தப்பட்ட அமைச்சக்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து, 2021இல் சாதி அடிப்படையிலான மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்கப்படுமா என ராமதாஸ் கேள்வியை முன்வைத்தார்.