தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

celebrity cricket league - சத்தீஷ்கரில் தமிழ் சினிமா நட்சத்திரங்கள்! - சென்னை ரைனோஸ்

செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் நாளை தொடங்கவுள்ள நிலையில் சென்னை ரைனோஸ் உள்பட மற்ற மாநில அணிகள் சத்தீஸ்கரில் உள்ள ராய்ப்பூருக்கு வந்தடைந்தனர்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Feb 17, 2023, 6:26 PM IST

ராய்ப்பூர் வந்தடைந்த சென்னை ரைனோஸ்

ராய்ப்பூர்: Celebrity Cricket League(2023) செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் நாளை (பிப்.18) தொடங்க உள்ள நிலையில் சென்னை ரைனோஸ், கர்நாடகா புல்டோசர், பெங்கால் டைகர் அணிகள் ராய்ப்பூரை வந்தடைந்தனர். இந்நிலையில், கர்நாடக புல்டோசர்ஸ் மற்றும் சென்னை ரைனோஸ் அணிகள் மேக்னெட்டோ மாலில் அமைந்துள்ள ஒரு உணவகத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தனர்.

அப்போது, சென்னை ரைனோஸ் அணியில் வீரர் நடிகர் பரத் கூறுகையில், ''செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் கடந்த 4 ஆண்டுகளாக வெற்றிகரமாக நடந்து வருகிறது. 4 ஆண்டுகளில் இந்தப் போட்டி நிறைய மாற்றங்களைக் கண்டுள்ளது. பஞ்சாப் போன்ற பல்வேறு இடங்களைச் சேர்ந்த அணிகள், போஜ்புரி, மும்பை, கொல்கத்தாவில் இருந்து அணிகள் இணைகின்றன. இது ராய்ப்பூரில் முதல் முறையாக ஏற்பாடு செய்யப்படுகிறது'' என்றார்.

இதுகுறித்து சென்னை ரைனோஸ் வீரர் சாந்தனு கூறுகையில், "ராய்ப்பூரில் நாங்கள் விளையாடுவது இதுவே முதல் முறை. ராய்ப்பூரில் உள்ள ஷஹீத் வீர் நாராயண் சிங் சர்வதேச மைதானம் மிகவும் அருகில் உள்ளது. நாங்கள் மிகவும் உற்சாகமாக உள்ளோம். ராய்ப்பூரும் ஆதரவளிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். கடந்த முறை நாங்கள் சாம்பியன்களாக இருந்தோம், இந்த முறையும் சாம்பியன் ஆவோம்'' என்றார்.

செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் முதல் போட்டியானது நாளை தொடங்குகிறது. இதில், இரண்டு போட்டிகள் நடைபெற உள்ளன. முதல் போட்டி கர்நாடகா புல்டோசர்ஸ் மற்றும் பெங்கால் டைகர்ஸ் இடையே நாளை நண்பகல் 2:30 முதல் 6:30 மணி வரையும், இரண்டாவது போட்டி சென்னை ரைனோஸ் மற்றும் மும்பை ஹீரோஸ் இடையே நாளை மாலை 7 முதல் 11 மணி வரையும் நடைபெறவுள்ளது.

இதையும் படிங்க:Celebrity Cricket League: எட்டு திரையுலகம் களம்காணும் கிரிக்கெட் போட்டி

ABOUT THE AUTHOR

...view details