தானே:பிரபல மராத்தி நடிகையான கேதகி சீத்தலே தேசியவாத காங்கிரஸ் தலைவரான சரத் பவார் குறித்து தன்னுடைய முகநூல் பக்கத்தில் தரக்குறைவான கருத்தை பதிவிட்டதாக கூறப்படுகிறது. இது அனைத்து சமூக வலைத்தளங்களிளும் பேசு பொருளாக மாறி பெரும் சர்சைக்குள்ளானது.
சரத் பவார் குறித்து சர்ச்சை கருத்து பதிவிட்ட பிரபல நடிகை கைது - சரத் பவார்
தேசியவாத காங்கிரஸ் தலைவரான சரத் பவார் குறித்து மராத்தி நடிகை கேதகி சீத்தலே தன்னுடைய முகநூல் பக்கத்தில் தரக்குறைவான கருத்தை பதிவிட்ட நிலையில் அவர் கைது செய்யப்பட்டார்.
கருத்தை பதிவிட்ட நடிகை கேதகி சீத்தலே மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டது. இதையடுத்து நடிகை கேதகி சீத்தலே கைது செய்யப்பட்டார். சரத் பவாரின் ஆதரவளர்கள் இந்த பதிவிற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கேதகி சீத்தலே இது போன்ற சர்ச்சைக்குறிய கருத்தை பதிவிடுவது முதல் முறை அல்ல. இதற்கு முன்பே சில முறை சமூக வலைத்தளங்களில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:முதல் மாத திருமணம் முடிந்து ஆலியா மற்றும் ரன்பிர்