பிரபல பாடகர் கேகே (கிருஷ்ணகுமார் குன்னத்) நேற்று கொல்கத்தாவில் ஒரு இசை நிகழ்ச்சிக்குப் பின்னர் மாரடைப்பால் காலமானார். இதனையடுத்து பல பிரபலங்களும் ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டர் பக்கத்தில், ‘பிரபல பாடகர் கேகே என்ற கிருஷ்ணகுமார் குன்னத்தின் அகால மறைவு வருத்தமளிக்கிறது. அனைத்து வயதினரையும் கவர்ந்த அவரது பாடல்கள் பலவிதமான உணர்ச்சிகளை பிரதிபலித்தன. அவரது பாடல்கள் மூலம் நாம் எப்போதும் அவரை நினைவில் கொள்வோம். அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள். ஓம் சாந்தி” எனப் பதிவிட்டுள்ளார்.
அமித் ஷா இரங்கல்:மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ட்விட்டரில் அவரது இரங்கல் செய்தியை தெரிவித்துள்ளார். அதில், ‘கே.கே மிகவும் திறமையான மற்றும் பல்துறை பாடகர் ஆவார். அவரது அகால மறைவு மிகவும் வருத்தமளிக்கிறது மற்றும் இந்திய இசைக்கு மிகப்பெரிய இழப்பாகும்.